Book My Iyer

http://bookmyiyer.com/

Saturday, November 12, 2016

அச்சம் என்பது மடமையடா - Failed by its logic and screenplay.
சிம்பு மற்றும் கவுதம் படம் என்றாலே பாடல்கள் காட்சி அமைப்பு நன்றாக இருக்கும் என்பது பலருடைய கணிப்பு.

வழக்கம் போல நான் கதையை சொல்ல போவது இல்லை. படத்தின் screenplay,cast,making பற்றி பார்க்கலாம்.

கவுதம் மேனன் என்றாலே ஒரு trademark ஒன்று உண்டு அதாவது ஒரு சாமானிய ரசிகனால் கூட கவுதமின் touches கண்டுபிடித்து விடலாம். இது தமிழ் சினிமாவில் பல  காலமாக நடப்பதுதான். உ .தா . மணிரத்னம் கதாபாத்திரங்கள் வசனங்களை விட்டு விட்டு உச்சரிப்பது, இரயில் காட்சிகள், மழை பாடல்கள். பாலச்சந்தர் இந்த விஷயத்தில் பலே கில்லாடி வசனங்கள் இல்லாமல் வெறும் கட்சிகளாலே அந்த situationஐ விளக்குவது . சிந்துபைரவி திரைப்படத்தில் சுகாசினி வேறு ஊருக்கு சென்று விட்டதை சிறுவர்கள் ரயில் விளையாட்டு பாணியில் காட்டுவார் . அதே போல வீட்டுக்கு விருந்தினர் வரும் காட்சியை வாசலில் உள்ள காலணிகளை வைத்து உணர்த்துவது என்று அசத்துவார் இயக்குனர் சிகரம்.

இதே போல தான் கவுதம், அவர் படத்தில் வரும் நாயகன் கண்டிப்பாக மேல் தட்டு சமூகத்தை சேர்ந்தவனாக இருப்பான், அவர்கள் வீட்டில் எப்பொழுதும் 10 வார்த்தைகளில் 8 வார்த்தை ஆங்கிலத்தில் அதுவும் ஸ்டைல் ஆக பேசுவர் , உருகும் அப்பா , அண்ணனுக்கு சப்போர்ட் செய்யும் தங்கை, நாயகன் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் அல்லது ஒரு போலீஸ். மிக முக்கியமான directorial  டச் நாயகன் தன்னுடைய கதையை viewersகு voice over மூலமாக விளங்குவான்.

இந்த trademark எல்லாவற்றையும் நாம் கடைசியாக விண்ணை தாண்டி  வருவாயாவில் ரசித்தோம். அதன் பின் அவர் எடுக்கும் திரைப்படங்களில் இந்த காட்சி யாவையும் ரசிக்க முடியவில்லை காரணம் screenplay. கதையே இல்லாத திரைப்படங்களை கூட நல்ல screenplay  வைத்து அந்தர் செய்யலாம். அதே போல நல்ல கதையை அரத பழைய screenplay வைத்து போட்டு தள்ளலாம் . இந்த திரைப்படம் இதில் இரண்டாம் வகை.

vtv என்ன பெரிய கதை இருந்தது, நாயகன் நாயகியை விட இளையவன், நாயகியை  தொரத்தி, தொரத்தி ஆங்கிலத்தில் காதலிப்பான் இல்லை கெஞ்சுவான். ஆனால் அந்த படத்தை தூக்கி நிறுத்தியது screenplay and logic. தன் காதலியின் கல்யாணத்திற்கு சென்று எங்கு இருந்தாலும் வாழ்க என்று பாடும் நாயகனுக்கு மத்தியில், எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என் மணமேடையில் ஜெஸ்ஸி நகர்ந்து செல்லும் இடம் கிளாஸ் சீன் ,அங்கே கூட்டத்தில் ஒளிந்து இருக்கும் கார்த்திகை, அவன் அங்கு தனக்காக வந்துள்ளான் என்பதை அப்போது தான் அறியும் ஜெஸ்ஸியின் reaction செம. இதேபோல அந்த திரைப்படத்தில் எத்தனையோ feel good மொமெண்ட்ஸ் இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் ?. படத்தின் முதல் பதினைந்து நிமிடம் இது vtv பார்ட் 2 வா என்ற சந்தேகம், ஆனாலும் முதல் பாதி சிறிது போர் அடிக்காமலே சென்றது காரணம் பாடல்கள், 10 நிமிடங்களுக்கு ஒரு பாடல் ரீதியாக எல்லா பாடல்களுமே முதல் பாதியில் முற்றும் பெற்றது. இது ஒரு விதத்தில் எனக்கு பிடித்திருந்தது , ஏன்னெனில் நம்மூர் திரைப்படங்கள் எப்படியும் முதல் பாதியில் கதை சொல்ல மாட்டார்கள் atleast பாடல்களை முதல் பாதியிலே ஒட்டிவிட்டால் இரண்டாம் பாதியில் கதை சுவாரசியமாய் செல்லும் பொழுது நடுவில் பாடலை போட்டு கடுப்பேத்தமாட்டார்கள்.

பாடல்கள் நன்றாக இருந்ததும் ஒரு காரணம் முதல் ஓரளவு பாதி நன்றாக போனதற்கு.

முதலில் திரைப்படம் என்றால் கட்சிகளால் ஒரு கதையை விளக்குவது. கவுதம் வாய்ஸ் ஒவேரில் கடைச்சொல்லுவார் அதில் நமக்கு இந்த வருத்தமும் இல்லை அதற்காக படத்தின் ஒட்டு மொத ட்விஸ்ட் or  கதை முழுவதையும் வேகமாக சிம்பு வாயாலே சொல்ல வைத்தது மனதில் ஒட்டவே இல்லை. ஏன் கவுதம், காட்சிகளை செதுக்குவதில் நீங்கள் தான் தற்போதைய சினிமாவில் வல்லவர் இதை நீங்கள்  அறிய வேண்டும்.

அடுத்து படத்தின் கிளைமாக்ஸ் பல பேர்களால் கழுவி உத்தப்படுவது GVM படத்தில் இப்புடி ஒரு கிளைமாக்ஸ். அதை என் வாயால் சொல்ல முடியாது முடிந்தால் தியேட்டரில் பார்த்துக்கொள்ளுங்கள்.

commercial படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது தான் ஆனால் லாஜிக் என்ன விலை என்று இந்த படம் கூரு போட்டு\விற்றுவிட்டார்கள்.

காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்ற cop படங்களை எடுக்கும் இவருக்கு தெரியாதா ஒரு துப்பாக்கியில் எத்தனை தோட்டா இருக்கும் என்று, சிம்பு தன் இஷ்டத்துக்கு கேட்ரிட்ஜ் மாத்தாமல் விளையாடுகிறார்,சாதாரண verification வந்தாலே ரேஷன் கார்டு, காஸ் proof என உருவி விடுவார்கள், இங்கே விசாரிக்க வரும் போலீஸ் சிம்பு தன் மகன் இல்ல வேறு ஒருவர் என காட்ட போலீஸும் வீட்டில் உள்ள showcase போட்டோவை வ\பார்த்து ஓகே சார் என செல்கிறார்கள், சாவி இல்லாமல் புல்லட் ஸ்டார்ட் செய்வது,திடீர் என்று 1st கிளாஸ் கம்பார்ட்மெண்டில் பயணம் செய்வது என விளையாடி இருக்கிறார்கள்.

நான் கவுதம் படங்களை ரசித்து பார்க்கும் ஆள் எனக்கே எதனை குறைகள் தெரிகிறது, கவுதம் உங்களால் மீண்டும் ஒரு vtv,காக்க காக்க, வேட்டையாடு விளையாடு கொடுக்க முடியும் என்பதில் உறுதியாய் நம்புபவன் நான்.

யாரேனும் இந்த படத்தை பார்த்தவர்கள் தயவு செய்து இந்த திரைப்படம் எங்கு மரியோ புஸ்ஸ்வ் காட்பாதர்ஐ தழுவி உள்ளது என்று கமெண்ட் செய்யுங்கள்,நான் நாள் முழுவதும் யோசித்து பார்த்தேன் ஏதும் அகப்படல.

-ராம்
No comments:

Post a Comment