Book My Iyer

http://bookmyiyer.com/

Saturday, November 12, 2016

அச்சம் என்பது மடமையடா - Failed by its logic and screenplay.




சிம்பு மற்றும் கவுதம் படம் என்றாலே பாடல்கள் காட்சி அமைப்பு நன்றாக இருக்கும் என்பது பலருடைய கணிப்பு.

வழக்கம் போல நான் கதையை சொல்ல போவது இல்லை. படத்தின் screenplay,cast,making பற்றி பார்க்கலாம்.

கவுதம் மேனன் என்றாலே ஒரு trademark ஒன்று உண்டு அதாவது ஒரு சாமானிய ரசிகனால் கூட கவுதமின் touches கண்டுபிடித்து விடலாம். இது தமிழ் சினிமாவில் பல  காலமாக நடப்பதுதான். உ .தா . மணிரத்னம் கதாபாத்திரங்கள் வசனங்களை விட்டு விட்டு உச்சரிப்பது, இரயில் காட்சிகள், மழை பாடல்கள். பாலச்சந்தர் இந்த விஷயத்தில் பலே கில்லாடி வசனங்கள் இல்லாமல் வெறும் கட்சிகளாலே அந்த situationஐ விளக்குவது . சிந்துபைரவி திரைப்படத்தில் சுகாசினி வேறு ஊருக்கு சென்று விட்டதை சிறுவர்கள் ரயில் விளையாட்டு பாணியில் காட்டுவார் . அதே போல வீட்டுக்கு விருந்தினர் வரும் காட்சியை வாசலில் உள்ள காலணிகளை வைத்து உணர்த்துவது என்று அசத்துவார் இயக்குனர் சிகரம்.

இதே போல தான் கவுதம், அவர் படத்தில் வரும் நாயகன் கண்டிப்பாக மேல் தட்டு சமூகத்தை சேர்ந்தவனாக இருப்பான், அவர்கள் வீட்டில் எப்பொழுதும் 10 வார்த்தைகளில் 8 வார்த்தை ஆங்கிலத்தில் அதுவும் ஸ்டைல் ஆக பேசுவர் , உருகும் அப்பா , அண்ணனுக்கு சப்போர்ட் செய்யும் தங்கை, நாயகன் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் அல்லது ஒரு போலீஸ். மிக முக்கியமான directorial  டச் நாயகன் தன்னுடைய கதையை viewersகு voice over மூலமாக விளங்குவான்.

இந்த trademark எல்லாவற்றையும் நாம் கடைசியாக விண்ணை தாண்டி  வருவாயாவில் ரசித்தோம். அதன் பின் அவர் எடுக்கும் திரைப்படங்களில் இந்த காட்சி யாவையும் ரசிக்க முடியவில்லை காரணம் screenplay. கதையே இல்லாத திரைப்படங்களை கூட நல்ல screenplay  வைத்து அந்தர் செய்யலாம். அதே போல நல்ல கதையை அரத பழைய screenplay வைத்து போட்டு தள்ளலாம் . இந்த திரைப்படம் இதில் இரண்டாம் வகை.

vtv என்ன பெரிய கதை இருந்தது, நாயகன் நாயகியை விட இளையவன், நாயகியை  தொரத்தி, தொரத்தி ஆங்கிலத்தில் காதலிப்பான் இல்லை கெஞ்சுவான். ஆனால் அந்த படத்தை தூக்கி நிறுத்தியது screenplay and logic. தன் காதலியின் கல்யாணத்திற்கு சென்று எங்கு இருந்தாலும் வாழ்க என்று பாடும் நாயகனுக்கு மத்தியில், எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என் மணமேடையில் ஜெஸ்ஸி நகர்ந்து செல்லும் இடம் கிளாஸ் சீன் ,அங்கே கூட்டத்தில் ஒளிந்து இருக்கும் கார்த்திகை, அவன் அங்கு தனக்காக வந்துள்ளான் என்பதை அப்போது தான் அறியும் ஜெஸ்ஸியின் reaction செம. இதேபோல அந்த திரைப்படத்தில் எத்தனையோ feel good மொமெண்ட்ஸ் இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் ?. படத்தின் முதல் பதினைந்து நிமிடம் இது vtv பார்ட் 2 வா என்ற சந்தேகம், ஆனாலும் முதல் பாதி சிறிது போர் அடிக்காமலே சென்றது காரணம் பாடல்கள், 10 நிமிடங்களுக்கு ஒரு பாடல் ரீதியாக எல்லா பாடல்களுமே முதல் பாதியில் முற்றும் பெற்றது. இது ஒரு விதத்தில் எனக்கு பிடித்திருந்தது , ஏன்னெனில் நம்மூர் திரைப்படங்கள் எப்படியும் முதல் பாதியில் கதை சொல்ல மாட்டார்கள் atleast பாடல்களை முதல் பாதியிலே ஒட்டிவிட்டால் இரண்டாம் பாதியில் கதை சுவாரசியமாய் செல்லும் பொழுது நடுவில் பாடலை போட்டு கடுப்பேத்தமாட்டார்கள்.

பாடல்கள் நன்றாக இருந்ததும் ஒரு காரணம் முதல் ஓரளவு பாதி நன்றாக போனதற்கு.

முதலில் திரைப்படம் என்றால் கட்சிகளால் ஒரு கதையை விளக்குவது. கவுதம் வாய்ஸ் ஒவேரில் கடைச்சொல்லுவார் அதில் நமக்கு இந்த வருத்தமும் இல்லை அதற்காக படத்தின் ஒட்டு மொத ட்விஸ்ட் or  கதை முழுவதையும் வேகமாக சிம்பு வாயாலே சொல்ல வைத்தது மனதில் ஒட்டவே இல்லை. ஏன் கவுதம், காட்சிகளை செதுக்குவதில் நீங்கள் தான் தற்போதைய சினிமாவில் வல்லவர் இதை நீங்கள்  அறிய வேண்டும்.

அடுத்து படத்தின் கிளைமாக்ஸ் பல பேர்களால் கழுவி உத்தப்படுவது GVM படத்தில் இப்புடி ஒரு கிளைமாக்ஸ். அதை என் வாயால் சொல்ல முடியாது முடிந்தால் தியேட்டரில் பார்த்துக்கொள்ளுங்கள்.

commercial படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது தான் ஆனால் லாஜிக் என்ன விலை என்று இந்த படம் கூரு போட்டு\விற்றுவிட்டார்கள்.

காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்ற cop படங்களை எடுக்கும் இவருக்கு தெரியாதா ஒரு துப்பாக்கியில் எத்தனை தோட்டா இருக்கும் என்று, சிம்பு தன் இஷ்டத்துக்கு கேட்ரிட்ஜ் மாத்தாமல் விளையாடுகிறார்,சாதாரண verification வந்தாலே ரேஷன் கார்டு, காஸ் proof என உருவி விடுவார்கள், இங்கே விசாரிக்க வரும் போலீஸ் சிம்பு தன் மகன் இல்ல வேறு ஒருவர் என காட்ட போலீஸும் வீட்டில் உள்ள showcase போட்டோவை வ\பார்த்து ஓகே சார் என செல்கிறார்கள், சாவி இல்லாமல் புல்லட் ஸ்டார்ட் செய்வது,திடீர் என்று 1st கிளாஸ் கம்பார்ட்மெண்டில் பயணம் செய்வது என விளையாடி இருக்கிறார்கள்.

நான் கவுதம் படங்களை ரசித்து பார்க்கும் ஆள் எனக்கே எதனை குறைகள் தெரிகிறது, கவுதம் உங்களால் மீண்டும் ஒரு vtv,காக்க காக்க, வேட்டையாடு விளையாடு கொடுக்க முடியும் என்பதில் உறுதியாய் நம்புபவன் நான்.

யாரேனும் இந்த படத்தை பார்த்தவர்கள் தயவு செய்து இந்த திரைப்படம் எங்கு மரியோ புஸ்ஸ்வ் காட்பாதர்ஐ தழுவி உள்ளது என்று கமெண்ட் செய்யுங்கள்,நான் நாள் முழுவதும் யோசித்து பார்த்தேன் ஏதும் அகப்படல.

-ராம்








Sunday, October 30, 2016

என்னை தேடி

என்னுடைய முதல் குறும் படம்

https://youtu.be/c3LQGIPW1VA

I need all your support friends. I think it's a different try. Please spend 5 mins and put a genuine comment in youtube

- ராம்

Saturday, October 29, 2016

காஸ்மோரா - Real black magic.

இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. எந்த வித ஸ்பாய்லர் இல்லை. எனக்கு தெரிந்த மற்றும் நான் படித்த காஷ்மோராவை பற்றி கொஞ்சம் எழுதி உள்ளேன்.

உன்மையில் காஷ்மோரா என்றால் என்ன ?

காஷ்மோரா திரைப்படத்தில் தன்னுடைய பெயர் காரணத்தை கார்த்தி ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விளக்குவார்.

பில்லி சூனியம் போன்ற ப்ளாக் மேஜிக் போன்ற வஸ்துக்கெல்லாம் தலைவன் தான் இந்த காஷ்மோரா.

இந்த பில்லி சூனியம் போன்றவை உண்மையா என முதலில் சிறிது பார்க்கலாம்.

இந்த பில்லி சூனியம் போன்றவற்றில் மிக மிக டாப் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது மலையாள நம்பூதிரிகள் ஏனெனில் நம்முடைய சினிமா நமக்கு கற்பித்து அம்புட்டுதான்.நம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சி தொடர்களிலோ சூனியம் வைக்க மண்டை மேல் கொண்டை வைத்திருக்கும் நம்புதிரிகளே வருவார். ஆனால் இவர்களை காட்டிலும் வடக்கத்தியர்கள் இந்த கலையில் கைதேர்ந்தவர்கள்.

பணம்,பேராசை படைத்த நபர்கள் தன்னுடைய எதிரிகளை பொடி பொடி யாக செய்வது இந்த பிளாக் மேஜிக் உதவியால் தான். இது நமக்கு லூசுத்தனமாக கூட தெரியலாம். இந்த காலத்தில் அதுவும் கணினி யுகத்தில் என்று.

ஒரு சின்ன விஷயம் யோசித்து பாருங்கள், மனிதர்கள், மற்ற உயிரினம் போன்ற உலகம் ஒன்று இருந்தால் ஏன் அவிகளுக்கு என்று ஒரு உலகம் இருக்க கூடாது ?. மிருகங்களை நாம் நமக்காக tame அதாவது நமக்காக use செய்வது போல ஏன் ஆவிகளை நம்முடைய சுய லபத்திற்கு use செய்யக்கூடாது ?

அப்படி என்றால் ஏன் எல்லோராலும் ஆவிகளை கட்டுப்படுத்த முடியவில்லை நல்ல கேள்வி சப்பயாக பதில் என்ன தெரியுமா எல்லோருக்கும் ஆடு மாடு மேய்க்க தெரியாது. Relate பணிக்குங்க.

ஒகே இந்த சூனியம் எப்படி வைப்பார்கள் அதில் எத்தனை வகை உண்டு, இந்தியவில் எங்கெல்லாம் இது நடக்கிறது, மேலும் வீரந்திரநாத் அவர் யார் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம். அவருக்கும் இந்த காஷ்மோராவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

பி.கு- காஷ்மோரா திரைப்படத்தில் இது எதுவும் காண்பிக்க படவில்லை அது ஒரு காஞ்சனா type மசாலா காமெடி. அதிகம் எதிர் பார்த்து என் தவறுதான். ஏவல் , பில்லி பற்றி இந்த படத்தில் ஒரே ஒரு இடத்தில் அதுவும் தேவையே இல்லாத இடத்தில் மிகவும் அலுப்பு தட்டும் விதத்தில் நகைச்சுவை என்று அவர்களே எண்ணி use செய்து உள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு காஷ்மோரா பதில் ராஜ் நாயக் என்று பேர் சுட்டி இருக்கலாம்.

அடுத்த பதிவில் மேலும் ப்ளாக் மேஜிக் பற்றி தெரிந்து கொள்வோம்.

- ராம்

Friday, October 28, 2016

காஸ்மோராவும் கொடியும்

இந்த வருடம் தீபாவளி சனிக்கிழமை வந்தாலும் திரைப்படங்கள் அதன் பிரேத்யேக தினமான வெள்ளிக்கிழமை வந்தது சிறப்பு.

இன்று கமலா cinemasஇல் back to back காஸ்மோராவும் கொடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி அந்த திரைப்படங்களை பற்றி அலசுவோம்.

காஷ்மோரா

இந்த தீபாவளிக்கு மிகவும் எதிர் பார்க்க பட்ட திரைப்படம். கார்த்தி என்னும் ஜனரஞ்சக நாயகனை நம்பி 60 கோடியை இறக்கிய திரைப்படம்.

கதை என்று பார்த்தால் பேய் ஓட்டுவதாக டுபாக்கூர் அடிக்கும் கார்த்தி ஒரிஜினல் பேய் இடம் போய் சிக்குவதுதான்.

படத்தின் மிக பெரிய குறை என்றல் அக்மார்க் தமிழ் சினிமா போல intervalகு பின் கதையை ஆரம்பிப்பது. இந்த முறை பல காலங்களுக்கு முன்னாலே மலை ஏறிவிட்டது. இன்னும் ஹீரோ இன்றோ பின் அவன் குடும்பத்தை வைத்து காமெடி அங்கே அங்கே பாடல்கள் என bubble gum போல இழு இழு என இழுத்துள்ளார் இயக்குனர் கோகுல்.

இரண்டாம் பாதியில் வரும் அந்த கால காட்சிகள் தான் படத்தின் பலம். ராஜ் நாயக் ஆகா கார்த்தி அட்டகாசம். நயன் தாரா 30 நிமிடமே வந்தாலும் அட்டகாசம்.

அருந்ததி மற்றும் மாகதீரா போன்ற கதை அமைப்பு சற்று நெருடல். மாகதீரா மற்றும் பாகுபலி போன்றே அந்த கால ராஜ்ஜியத்தை cg செய்து உள்ளார்கள். வேறு template நம்வரிடம் இல்லை போல.

ஆக மொத்தம் நல்ல ஒரு script சீரான treatment இல்லாமல் அங்கங்கே டப்பா ஆடுவது மிக பெரிய drawback.

காஷ்மோரா இன்னும் எடுத்து இருக்கலாம் ஜோரா.

கொடி

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் வேலை இல்லா பட்டதரினு ஒரு படம் ஹிட் குடுத்தேன். ஐயோ நீங்க கடைசியா குடுத்த ஹிட் அதான்னு பல meme.

தனுஷ் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நல்ல commercial படம் தேவை பட்டது அதற்கு ஏற்றார் போல இறட்டை வெடியாய் வெடிக்கிறது இந்த கொடி.

இரண்டு ஹீரோ இருந்தால் என்ன கதை பண்ண முடியும் ஆள் மாராட்டம் தான்.

ஆனால் படத்தை தூக்கி நிறுத்துவது திரிஷா மற்றும் தனுஷ் தான். திரிஷா செம acting. வில்லி characterisation பக்க செட்.

கொடி நன்றாக பறக்கும்.

-ராம்

Friday, September 30, 2016

மல்டி காம்ப்லெஸ் தியேட்டரும் அங்கே நடக்கும் கொள்ளையும்.

சமீபத்தில் ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்கு என் மனைவியோடு சென்றுருந்தேன். படம் நல்ல படம் தான் நான் தேர்ந்து  எடுத்த திரையரங்கம் தான் மட்டமானது.

என்னைப்பொறுத்த வரையில் சென்னையில் கொடுக்கும் காசுக்கு ஏற்ற வசதியை தருவது சத்யம் குழுமம் மற்றும் கமலா சினிமாஸ். மற்ற திரையரங்குகளில்  எல்லாம் ஏதேனும் குறைகள் இருக்கும்.

நான் சென்ற திரையரங்கம் AGS வில்லிவாக்கம். படம்  வருபவர்களை வெறுப்பு ஏற்றுவதில் மிக மிக சிறந்தவர்கள் AGS  சினிமாஸ். ஷோ ஆரம்பிப்பதற்கு 10 நிமிடம் முன்னாள் தான் உள்ளே அனுமதி. அதாவது திரையரங்கத்தினுள் அனுமதி அது வரை நாம் வெயிலிலோமழையிலோ  தான் நிற்க வேண்டும். என் மனைவி உள்ளே சென்றுவிட்டாள், ஐய்யா நான் உள்ளே செல்ல வேண்டும் என்று நான் அங்கு இருந்த பணியாளரிடம் சொன்னேன், அதற்கு அவர்   சொன்ன  பதில் தான் ultimate, கவலை படாதீர்கள் உங்கள் மனைவி உள்ளே safe ஆக இருப்பார் நீங்கள் இங்கே வெயிட் செய்யுங்கள்.  ஏன்டா தனி தனியா போறதுக்கு நாங்க ஏன்டா ஜோடியா வரோம். இப்போல்லாம் எவனும் தியேட்டர்ல படம் பாக்குறது இல்ல, ஏன் என் நண்பர்கள் பல பேர் தியேட்டர் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குறது இல்ல. இப்டியே போனா நானும் அந்த லிஸ்ட்ல சேந்துடுவானோனு பயமா இருக்கு :) .

இதைவிட கொடுமை 3.35 ஷோ உள்ளே அனுமதி இல்லை ஆனால் 3.45 ஷோ நாண்பர்களை உள்ளே அனுமதித்தார்கள். நல்லா வருவீங்கடா.

வெளியே நிற்பதற்கு கூட  ஏதோ கட்டுமான  பணி நடந்துகொண்டு இருந்தது. ஏற்கனனவே இருக்கும் பிரச்னை போதாது அது வேறு என் தலையில் விழுந்து   வேறு .

காசு கொடுத்தும் கேவலமாய் நடத்தும் இவர்களை என்னதான் செய்ய. இதனால் தன பலர் torrent மூலமாய் படம் தரவிறக்கம்  செய்து பார்க்கிறார்கள். நாங்கள் ஒன்றும் ஓசியில் படம் பார்க்க வரவில்லை என்பதை புரிந்து கொள்வார்களா ?

இது சமந்தமாய் மேலும் ஒரு பதிவை பகிர்கிறேன். இதனை நான் வெப்துனியாவில் இருந்து பகிர்கிறேன். நன்றி.

- ராம்

*********************************************************************************

டிவி, யூடியூப், மொபைல், டிவிடி, திருட்டு டிவிடி, இதையெல்லாம் தாண்டி குடும்பத்தோட படம் பார்க்க தியேட்டர் வர்றதுங்கிறது எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா? வெறுமனே பாப்கார்னும் பப்சும் வாட்டர்பாட்டிலும் வாங்க உங்க தியேட்டருக்கு எவனும் வரமாட்டான்... டியர் மல்டிபிளெக்ஸ் மங்காஸ்.
நேற்று இரண்டாவது முறையாக ஆண்டவன் கட்டளை படத்திற்கு குடும்பத்தோட போனேன்... மொத்தம் 7 டிக்கெட். 840 ரூபாய். வேளச்சேரில இருக்கிற பி.வி.ஆர். மல்டிபிளெக்ஸ் தியேட்டருக்கு.
படம் பார்த்துட்டு வந்து என் மனைவி கேட்கிறாங்க... 'ஏன், அந்த படம் சரியா தெரியல. வெளிறிப்போய் தெரியுது... எடுத்ததே அப்டியா?'ன்னு.
அடேய்... 120 ரூவா டிக்கெட் போனா பரவாயில்ல, நல்லா பார்ப்போம்னு நம்பித்தான்டா உங்க பார்க்கிங் கொடுமை, பாப்கார்ன் கொடுமை, குடிக்கிற தண்ணியில கூட நீங்க பண்ற கொடுமையை கண்டுக்காம விடுறோம். படத்தை மட்டுமாவது ஒழுங்கா காட்ட மாட்டீங்களாடா? ரெண்டரை மணி நேரம் படம் போடுறதுக்கு முன்னாடி ஒண்ணரை மணி நேரத்துக்கு விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறீங்களேடா.... அதையெல்லாம் பொறுத்துக்கிட்டுத்தானடா படம் பார்க்க வரோம். ஓரளவுக்காவது குவாலிட்டியா படம் போடுங்கப்பா... உங்களுக்கு புண்ணியமா போகும். ஏ சென்டர்ல போகுது... பி அண்ட் சி சென்டர்ல போகல.... அங்க போகுது இங்க போகலன்னு ஒரு படத்தை ஓட வைக்கிறதுக்கு பின்னாடி ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கு... இதுல, இப்டி நீங்க அரையும் கொறையுமா படம் காட்டுனா வேற என்ன நடக்கும். ஏற்கனவே விஜய்சேதுபதி ப்ரோ ரொம்ப 'கலரா' தெரிவாரு. இதுல நீங்க உங்க பங்குக்கு டல் பண்ணதுல பாவம்!
ரெகுலர் 190 ருவா. லார்ஜ் 240 ருவா. வேற என்ன பாப்கார்ன்தான்... சரி குழந்தை ஆசைப்பட்டு கேட்குதேன்னு 240 ருவா குடுத்து வாங்குனா... கண்டமேனிக்கு உள்ளுக்குள்ள எதை எதையோ கொட்டித் தராங்க... உப்புன்னா உப்பு அப்டி ஒரு உப்பு. த்தூ. கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்... நம்பி வரவனை மதிக்கணும். ச்சீய்.... சொல்லவே கேவலமா இருக்கு.
வாட்டர் பாட்டில் கேட்டா... ஏதோ ஒரே ஒரு கம்பெனி, ஹிமாலயா தான் அவங்க விப்பாங்களாம். அரை லிட்டர் இருக்கும். அதுக்கு 50 ரூவா.... நம்ம ஊர் பாஷையில நாலு மடக்கு தண்ணி.. ஒரு மடக்கு தண்ணிக்கு பத்து ரூவா வச்சா கூட, 40 ருவாயே ரொம்ப ரொம்ப அதிகம்டா நல்லவனுங்களா...!
மத்தவங்களோட ஒப்பிடுறப்போ கமலா தியேட்டர்ல ஸ்நாக்ஸ் விலை ரொம்ப கம்மி.. கண்டிப்பா அதுக்கு அவங்களை பாராட்டணும். அதே மாதிரி இந்த பேலஸோவா, பலாஸோ வா... அந்த தியேட்டர்ல சீட் ரொம்ப சௌகர்யமா இருக்கு. இந்த தியேட்டர்ல மட்டும்தான் கால் இடிக்காம கடைசி சீட்டுக்கு தாராளமா யோயிட்டு வரமுடியும்... இந்த ரெண்டு விசயத்துக்காக இந்த ரெண்டு தியேட்டர்காரங்களையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கேன்.
சின்னச் சின்ன தியேட்டருக்கு போனா, திரையில் காட்சிகள் சரியா இருக்காது... சவுண்ட் சரியா இருக்காதுன்னா தான் மல்டிபிளெக்ஸ் தியேட்டருக்கு வரோம்.
#ஆண்டவன்கட்டளை படத்துல #விஜய்சேதுபதி வாடகை வீட்டு ஓனர் கிட்ட சொல்வாரு... "வீடுன்னா கரெண்ட் இழுக்கணும்... தண்ணி பைப் மாட்டணும்.. பல்ப் போடணும்.... அதெல்லாம் செஞ்சா தான் அதுக்குப் பேர் வீடு.. அதுக்கும் சேர்த்துதானே வாடகை வாங்குறீங்க"ன்னு....
அதே மாதிரி... தியேட்டருன்னா... நல்ல சீட் வேணும்... நல்லா படம் தெரியணும்... நல்லா சவுண்ட் இருக்கணும்... அதைத்தான நாங்க கேட்குறோம். அதானே தியேட்டரு. அதுக்குத்தான டிக்கெட்டுக்கு காசு வாங்குறீங்க...
நல்லா பாப்கார்ன் வேணும்... எஸ்கலேட்டர் வேணும்... சும்மா தியேட்டருக்கு வெளியே நல்லா தண்ணியடிக்கிற பார் மாதிரி லைட் போட்டு ஏமாத்தணும்...னு நாங்க கேட்டமா? கூல் டிரிங்ஸ்ங்கிற பேர்ல பூச்சி மருந்தை விக்கிறதைக்கூட நாங்க ஏன்னு கேக்கலியேப்பா... அதை ஸ்டேட்டசுன்னு நெனைச்சு ஸ்டைலா உள்ள ஊத்துறோம்... அதைக்குடிச்சு குடிச்சே கேரளாவுல ஒரு சினிமா இயக்குநர் சீக்கிரமா போய்ச் சேர்ந்துட்டாரு.
என்னமோ நீங்க தான் சினிமாவை கண்டுபிடிச்ச மாதிரி ரொம்ப பண்ணாதீங்கடா டேய்... வயித்தெறிச்சலா இருக்கு. 
தயவு செஞ்சி இந்த தண்ணி, பாப்கார்ன், ஸ்நாக்குசு... இதுல காசு பார்க்க அலையாதீங்க... அதோட வாங்குற காசுக்கு ஓரளவுக்கு குவாலிட்டியா படம் காட்டுங்க
- முருகன் மந்திரம் திரைப் பாடலாசிரியர்



Thursday, September 8, 2016

இருமுகன் - ஒரு முகம் மட்டுமே பிரகாசம்

Image result for irumugan

விக்ரமிற்கு கடந்த 6 -7 வருடங்களககவே கட்டம் சரியில்லை. கடந்த 11 படங்களில் 2 மட்டுமே வணிகரீதியாக நன்றாக சென்ற படங்கள், அவை இரண்டுமே ஷங்கரின் திரைப்படங்கள்.

விக்ரம் போன்ற மகா மெகா நடிகன் ஏன் கதையை பார்த்து தேர்ந்து எடுப்பதில்லை என்பது என்னுடைய நெடு நாள் சந்தேகம். தான் நடிக்கும் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் படத்தை ஒத்துக்கொள்வர் போல. ஆனால் ஒரு படம் நன்றாக போவதற்கு கதை எவ்ளோ முக்கியமோ திரைக்கதை மற்றும் மேக்கிங் மிக மிக அவசியம். அதனால் தான் விஜய் அஜித் போன்றவர்களின் படங்கள் விக்ரம் படத்தை காட்டிலும் வசூலில் சொல்லி அடிக்கின்றன .

ஒரு காலத்தில் தில்,தூள்,சாமி,காசி,பிதாமகன் என்று வீடு கட்டி அடித்தவர் விக்ரம். விஜய் அஜித்தெலாம் இனி அம்புட்டு தான் என எல்லோரும் நினைத்த நேரம் அது. விக்ரம் செய்த தவறு கடந்த 10 வருடங்களாக அவர் ஒரு ஒரு படங்களுக்கு எடுத்து கொண்ட நேரம், அவருடைய தலை எழுத்து அந்த படங்கள் பப்படம் ஆனது.

விக்ரம் தனக்கு கொடுக்க படும் பாத்திரம் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணுவதால் தான் சமீபத்தில் அவர் படங்கள் பப்படம் ஆகிறது. ஒரு திரைப்படம் நன்றாக இல்லை ஆனால் அதில் வரும் குணச்சித்திர நடிகர் நன்றாக நடித்துள்ளார் ஆனால் அது மட்டும் அந்த படத்திற்கு வெற்றியை கொடுக்காது. அது தான் இப்பொழுது விக்ரம் படங்களுக்கு நடந்து கொண்டு இருக்கின்றது.


Image result for irumugan


ஹ்ம்ம் வழக்கம் போல இந்த திரைப்படத்திற்கும் விக்ரம் உடல்,உயிர்,தாடி எல்லாத்தையும் கொடுத்து உள்ளார். படத்தின் ஆக மொத்த குறை என்றால் ஒரு crime திரில்லர் இன்வெஸ்டிகஷன் படம் காட்சிக்கு காட்சி வேகமாக அதேநேரம் ஒரு ஒரு முடிச்சாக அவிழ வேண்டும். இங்கு நடப்பதோ விக்ரமும்,நித்யா மேனனும் காரில் வில்லன் கெங்கை follow செய்கிறார்கள், திடீர் என விக்ரம்,நயன்தாரா சம்மந்த  பட்ட பிளஷ்பக் portion விரிகிறது, காட்சிகளாக சென்றால் பரவாயில்லை ஆனால் தேவை இல்லாத ஒரு பாடல் காட்சி வந்து கடுப்பேத்துகிறது . பின் மீண்டும் follow  செய்யும் காட்சி, ஆனால் தேவை இல்லாமல் விரிந்த flashback ஆல் படத்திற்கு முக்கியமான இன்டெர்வல் pre-sequenceஇல் நம்மால் ஒன்ற முடியவில்லை.

Image result for joker nurse
Image result for irumugan nurse



பேட்மேன் darknight வந்த பொழுது ஜோக்கர் கேரக்டர் யார் செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் பொழுது என் கண்முன்னே நின்றவர் விக்ரம்தான். இருமுகனில் பிரகாசமான முகம் இந்த முகம் தான் LOVE . ஹாஸ்பிடல் sequence படத்திற்கு பக்கா பக்கபலம். ஜோக்கர் செய்யும் அட்டூழியம் போல இந்த படத்தில் லவ் பாத்திரம் அந்த ஹாஸ்பிடலில் செய்யும்  சேட்டை  அட்டகாசம்.


தம்பி ராமைய்யா சில இடங்களில் சிரிப்பு பல இடங்களில் கடுப்பு. நயன் வழக்கம் போல நடிப்பு,glamour இரண்டும் கலந்து அடித்து இருக்கிறார்.

இருமுகனின் பலம் விக்ரம் தான், அவர் என்ன செய்தாலும் அது செயற்கை ஆக தெரிய வாய்ப்பே இல்லை. அந்த பிரம்மன் இவரை நடிப்பதுக்காக படைத்தான் போல.

படம் ராஜபாட்டை,10எண்றதுக்குள்ள பொல்லா மொக்கை இல்லை, ஆனால் திரைக்கதை இன்னும் concentrate செய்து இருந்தால் நல்ல திரில்லர் கம் action படமாக வந்து இருக்கும். விக்ரம் விழித்துக்கொண்டு கதை கேட்கும் நேரம் வந்து விட்டது, விழித்தால் நல்லது.

- ராம்
























Friday, August 12, 2016

The Killing Series | சுவாதி மர்டர் கேஸ்




NO MAN CAN HOPE TO FIND OUT THE TRUTH WITHOUT INVESTIGATION.



ஒரு Investigation அதாவது ஒரு கொலை நடந்து உள்ளது, அந்த கொலையை எப்படி போலீஸ் கண்டுபிப்பார்கள் இதுதான் PLOT. இது நம்மக்கு தெரிந்த கதை என்று என்று உதாசீனப்படுத்த முடியாது. இதுவரை நம்மக்கு தெரிந்த இன்வெஸ்டிகஷன் அதாவது படத்தில் இருந்து நாம் தெரிந்து கொண்ட இன்வெஸ்டிகஷன் எப்படி இருக்கும், யாரேனும் ஒருவர் கொலை செய்யப்படுவர், அந்த இடத்துக்கு போலீஸ் வரும், அது ஒருவேளை ஹீரோவாக கூட இருக்கலாம், இல்லை  என்றால் ஹீரோ சம்மந்தமே இல்லாமல் அந்த இடத்திற்கு வருவார் திடீர் என்று அவருக்குள் இருக்கும் சூப்பர் ஸ்கில்லை யூஸ் செய்து கொலையாளியை கண்டுபிடிப்பார். இந்த காட்சிகளெல்லாம் ஒன்று Intro அல்லது Interval சீன்களுக்காக பயன்படுத்தப்படும்.

ஆனால் உண்மையில் எத்தனை சம்பவங்கள் அந்த கொலைகளில் ஒளிந்து கொண்டிருக்கின்றன, எத்தனை வலி, துன்பம்,அவமானம். இதெல்லாம் நம் திரைப்படங்களில் விரிவாக அலசப்படுவதில்லை ஒன்று இரண்டு திரைப்படங்களை தவிர அதுவும் முழுமையாக இல்லை.


உதாரணத்துக்கு நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை சம்பவம், நடந்து எத்தனை நாள் கழித்து கொலையாளியை பிடித்தனர் ? . இன்னும் பிடிபட்ட  நபர்  தான் கொலையாளியா என்ற சந்தேகம் வேறு நிலவுகிறது. இந்த உதாரணத்தை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் இந்த சம்பவம் தான் நம்மில் பலருக்கு நினைவு இருக்கிறது, இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நாம் இதையும் மறந்து விடுவோம் அல்லது மறக்கடிக்க படுவோம்.

நம்  தமிழ்நாட்டில் கடந்த 3 வருடங்களில் 81 கௌரவ கொலைகள் இது கணக்கில் வந்தது வராதது ? .உடுமலைப்பேட்டையில்  ஷங்கரை நடுரோட்டில் வெட்டியது நம்மில் எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது.கமலஹாசன் சொல்வது போல மறதி நம் தேசிய வியாதி.


என்னால் எப்படி இந்த சீரிஸ்ஐ ஸ்வாதி murder உடன் லிங்க் செய்ய முடிந்தது என்றால், இந்த சீரிஸ் நான் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது.

ஒரு குடும்பத்தில் சாதாரண மரணம் ஒன்று சம்பவித்தாலே அந்த குடும்பத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம். அதுவே ஒரு கொலையாக அதுவும் ஒரே மகளாக இருந்தால் அந்த குடும்பம் அந்த இழப்பில் இருந்து வெளிவர முடியுமா அப்படியே வந்தாலும் அதற்கு எத்தனை வருடங்கள் ஆகும்.  கொலை செய்தவனை பழிவாங்கியபின் டூயட் பாடுவது எல்லாம் சினிமாவில்தான்.

இதே இடத்தில் ஸ்வாதியை பொருத்தி பாருங்கள், ஒரு சாதாரண காலை நேரத்தில் ரயில்வே நிலையத்தில் வெட்டி கொல்லப்படுகிறாள். அவளை ட்ராப் செய்துவிட்டு போன தந்தையின் நிலை, வீட்டில் உள்ளவர்களின் மனநிலை ?

இவை அனைத்தும் இந்த கில்லிங் சீரிஸ் இல் மிகவும் நேர்த்தியாக காண்பித்து உள்ளனர். உதாரணத்திற்கு நம்மக்கு தெரிந்தவரின் மகளோ அல்லது தங்கைக்கோ இப்படி நடந்தால், முதலில் நாம் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வோம் அவர்களுக்கு உதவவே நம்மக்கு பயமாய் இருக்கும் காரணம் போலீஸ் விசாரணை.

போலீஸ் நம்மை ஒரு சம்பவத்தை பற்றி விசாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அதிலும் நாம் அதில் முதல் சஸ்பெக்ட் என்றால் அவர்கள் treatment எப்படி இருக்கும். நாம் வேலை பார்க்கும் இடத்தில் நம்மை எப்படி மதிப்பார்கள் ? நாம் நிரபராதி என்று உறுதி ஆனா பின்கூட நம்மால் முன்னைப்போல் சுதந்திரமாக சுற்றித்திரியமுடியுமா ?

சும்மா வேலை பார்க்கும் இடத்தில் ஒரு escalationஆகி மேனேஜர் நம்மை அவர் கேபினில் கிழித்து அனுப்பியபின்னே நம் சக ஊழியர்கள் நம்மிடம் மீண்டும் ஒரு வேலையை தர சில நாட்களுக்கு தயங்குவர். இந்த சாதாரண விடயத்துக்கே இத்தனை விளைவுகள் என்றால் ?

அடுத்து போலீஸ் துப்பறியும் முறை இதில் அட்டகாசமாய் படமாக்கி உள்ளனர். போலீஸாரும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு. எந்நேரமும் இன்வெஸ்டிகஷன் இல் இருக்கும் ஒருவர் எப்படி தன் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க முடியும். இதில் ரோஸி கேஸ் handle செய்யும் Sara என்னும் பெண் தன்னுடைய சிறுவனிடம் நேரம் ஒதுக்கமுடியாமல் தவிக்கிறாள்.

அதே போல் இறந்தவரின் நண்பர் நீங்கள் என்றால் அவருக்கும் உங்களுக்கும் உள்ள எல்லா அந்தரங்கங்களும் போலீஸ் விசாரணையில் வெளிவரும், அதை பத்திரிகைகள் தங்கள் இஷ்டத்திற்கு பிரசுரம் செய்வார்கள். உதாரணம் பிலால் மாலிக்.


அதேபோல் இறந்தவரை இறப்பதற்கு முன் அவர் செய்த அத்தனை செயல்களும் சோசியல் மீடியா கண் முன்னே வரும். உதாரணம் ஸ்வாதி பற்றி தற்பொழுது எழுதப்படும் நியூஸ்சே போதும்.


வெறும் கொலை துப்பறிதல் பற்றி சொல்லாமல், அவர்களுடைய பீலிங்ஸ் பற்றி கூறி இந்த சீரிஸ் என் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. சீசன் 1& 2 மிகவும் த்ரில்லிங் ஆக நீங்கள் உணர்வீர்கள்.

ஒரு பெண் இருந்தாலும் அவர்களை பற்றி அவதூறு பேசும் நபர்கள் இறந்தாலும் விடமாட்டார்கள்.

காதலிப்பவனை நிராகரித்தால் அவன் வெட்டுவான் அல்லது ஆசிட் அடிப்பான், சரி அவன் கரம் பிடித்தால் பெற்றோர்கள் கௌரவம் என்னும் காரணம் காட்டி வெட்டுவர். பாவம் இந்த பெண் என்ன தான்  செய்வாள்.

-ராம்


























Saturday, July 23, 2016

கபாலி - இதுவும் அரசியல்

கபாலி கடந்த 2 வாரங்களாக தமிழகமே கூறிக்கொண்டு இருந்த ஒரு மந்திரம்.ஒரு திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பது சாதாரண விடயம். அதுவே ஒரு முன்னேறும் ஒரு டைரக்டர் மெட்ராஸ் போன்ற படத்தை இயக்கிய ஒருவர் படம் என்றால் சாதாரண ரசிகன் கூட அந்த திரைப்படம் எப்படி இருக்கும் என எண்ணுவான்.

அதே திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்னும் ரஜினிகாந்த் இணைந்ததால் எதிர்பார்ப்பு பன்மடங்கு ஆனது. ரஜினிகாந்த் படங்களுக்கு எப்பொழுதுமே தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு உண்டு ஆனால் இந்த படத்தை ஒட்டு மொத்த தென் தமிழகமே எதிர்பார்த்தது எப்படி ?

கலைப்புலி S .தாணு ரஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை தந்தவர். இதுவரை ரஜினியை வைத்து அவர் தயாரித்தது இல்லை. அதற்கு காரணம் அவர் முன்னாளில் சந்தித்த பல நஷ்டங்கள். ஆளவந்தான் தயாரித்து மரண அடிவாங்கியவர். பின்பு வணிகரீதியாக அவரை சிறிது எழுப்பி விட்டது சச்சின், காக்க காக்க மற்றும் மாயாவி போன்ற படங்கள் தான். தன் மகனை டைரக்டர்ஆக்கி தனக்கு தானே சூடு வைத்துக்கொண்ட படம் சக்கரைகட்டி.

அதன் பின் அவர் இன்று வரை செய்த மிக பிரம்மாண்டமான பிசகு கந்தசாமி. எப்படி சுசி கணேசன் இந்த கதையை ஓகே செய்தார் தாணுவிடம் என்பது இன்னும் புரியாத புதிர். அந்நியன்,ரமணா,இந்தியன் போன்ற படங்களை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்திவிட்டு கொஞ்சம் சூப்பர் ஹீரோ மாஸ்க்கை தூவினால் அது கந்தசாமி.

இந்த திரைப்படத்திற்கு பின் அவர் அடுத்த திரைப்படம் தயாரிக்க 3 வருடங்கள் ஆனது. துப்பாக்கி எப்பேர் பட்ட படம் என்பது எல்லோரும் அறிந்தது. தாணுவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சென்ற திரைப்படம் துப்பாக்கி. பின் தெறி மூலம் பழைய formku திரும்பினார்.

ரஜினியை வைத்து படம் எடுப்பதில் லாபமும் உள்ளது ரிஸ்கும் உள்ளது. தாணு செய்த ப்ரோமோ என்னவென்று நான் சொல்ல வேண்டியது இல்லை. aeroplaneஇல் போஸ்டர் அடித்தார்,சிம் கார்டு ரிலீஸ் செய்தார் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் உச்சம் இதுவரை யாரும் செய்யாதது இது தாணுவின் தந்திரம் என கூறலாம். படம் பப்படம் அவதால் தானே வசூல் வராது, சாமானிய ரசிகன் மிஞ்சிப்போனால் 120 அல்லது அதிகபட்சம் 200 வரை குடுத்து பார்ப்பான், ஆனால் IT company என்னும் கார்பொரேட் ???.

இப்பொழுதெல்லாம் படம் ஓடுவது முதல் மூன்று நாட்களே,ஓரளவு சுமார் என்றால் இன்னும் இரண்டு வாரங்கள் அவ்ளோதான் அந்த படத்தின் உயிர் நாடி.இதை தாணு முன்னாட்களில் வாங்கிய அடிகளின் பலனாய் நன்றாக புரிந்துகொண்டு படத்தை JAZZ சினிமாஸ் இடம் விற்றார், அது யாருடைய குரூப் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். படம் அரசிடமே உள்ளதால் எல்லா திரைஅரங்கம் ஒன்லைன் புக்கிங் 200,300 என்று விற்றனர். இதற்கு எதிராக தொடுக்க பட்ட பொதுநல வழக்கு ஈஸியாக தள்ளுபடி செய்யப்பட்டது.ஓன்லைனினிலேயே 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றால் பல தியேட்டர்கள் புக்கிங் ஓபன் செய்யவே இல்லை, நேராக சென்று டிக்கெட் விலை விசாரித்தால் 1000,2000 என கூறுபோட்டனர்.


So சாதாரண ரசிகன் எவ்ளோ காசு குடுத்து கண்டிப்பாக பார்ப்பதற்கு யோசிப்பான். கார்பொரேட் கம்பனிகளுக்கு bulk புக்கிங் செய்ய  வைத்தால். ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு வைத்தால் யோசித்து பாருங்கள்.

ரஜினி எனும் பொண் முட்டை இடும் வாத்தை தாணு 3 நாட்களில் அறுத்து உள்ளார். இதற்கு கண்டிப்பாக ரஜினியும் சப்போர்ட் செய்து இருப்பார்.

ரஜினி பழசை மறந்து இருக்க மாட்டார் என நம்புவோம், அவர் இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருப்பதற்கு கார்பொரேட் கம்பெனிகளோ அல்லது தாணுவோ காரணம் இல்லை, சாமானிய ரசிகனின் விசிலும்,கைதட்டலும் தான் அவரை இங்கே உட்கார வைத்துள்ளது.

இப்பொழுது படத்திற்கு நெகட்டிவ் ரெவியூஸ் வந்து கொண்டிருக்கிறது ஆனாலும் படம் நல்ல வசூலை கண்டிப்பாக பெரும். விமர்சனங்களுக்கும், மௌத் டால்க் இரண்டும் இந்த படத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.இப்பொழுது சாமானிய மக்களுக்கு டிக்கெட் வரும் திங்களில் இருந்துதான் கிடைக்கும், அதனால் கண்டிப்பாக இன்னும் இரண்டு வார இறுதிக்கு இந்த மொக்கை படம் ஓடும், அதை ஓட்டுவதற்கு தாணு கண்டிப்பாக ஒரு ப்ரோமோ ரெடி செய்திருப்பார்.

இத்தனை அரசியல் இந்த திரைப்படத்தை சூழ்ந்து உள்ளது, இது நம்மக்கு  தெரிந்த விடயங்கள், இன்னும் தெரியாத விடயங்கள் பல இருக்கலாம்.

எப்பொழுதும் தமிழன் நல்ல திரைப்படங்களை ஆதரிப்பான் இப்பொழுது கபாலி உங்கள் கையில்.

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் தாணுவும், ரஜினியும் பிளக்க மாட்டார்களா என்ன ?

-ராம்






Friday, July 22, 2016

கபாலி - Usual Gangster with no twists and turns.

நேற்று மதியம் வரை படம் பார்க்கும் எண்ணம் இல்லை. ஏன் என நண்பர்களுக்கு தெரிந்து இருக்கும். எல்லா திரையரங்குகளும் corporate கம்பனிகளுக்கு bulk புக்கிங் செய்து நன்றாக காசு பார்த்துவிட்டார்கள். 120 டிக்கெட்டை 500க்கு விற்றாயிற்று இனி படம் பப்படம் ஆனாலும் முதலுக்கு மோசம் இல்லை.ஆனாலும் குமரன் மேடவாக்கம் திரை அரங்கத்திற்கு என் நண்பருடன் சென்றேன்.




Gangster genre  என்றால் மிஞ்சிப்போனால் மூன்று வகை கதைகள் தான்  சொல்லமுடியும். நாயகன் அடிமட்டத்தில் இருந்து gangster ஆவது அதில் முதல் வகை உ.தா The Scarface ,புதுப்பேட்டை . இரண்டாம் வகை கதாநாயகனின் தந்தை ஒரு டான், அவருக்கு பின் அவருடைய மகன் அந்த பீடத்தில் ஏறுவது. இந்த வகை தான் உலகம் முழுவதும் அடித்து துவைத்து இன்றுவரை எடுக்கப்படுகிறது. Godfather,Sarkar Series, தேவர் மகன் (டான் பாத்திரத்தை ஊர் பெரியவர் என்று மாத்தினால் ). மூன்றாம் வகை  நாயகன் பெரிய DON  சில பல தந்திரங்களால் அவன் குடும்பம் அழிந்துவிடும் அவன் மீண்டு வந்து வில்லன்களை அழிப்பான்.

கபாலி மூன்றாம் வகை திரைப்படம் . இந்த ரக படங்களில் கதைகளில் பெரிய வித்தை காட்ட இயலாது ஆனால் screenplayஇல் பல வித்தைகள் செய்யலாம். கபாலி இந்த இடத்தில்தான் பெரிதாக சறுக்கி உள்ளது.

Predictable screenplay என்று சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு ரஜினி தன் பெண்ணை தேடி அலைவார், அவரிடம் ஒரு பெண் அப்பா என்று உருகும், அதே நேரத்தில் அசாசின் பெண் ஒருவர் ரஜினியை கொள்வதற்கு சுற்றிக்கொண்டு இருப்பாள். இந்த scenarioவை ஒரு ஆங்கில படம் பார்க்கும் அல்லது நம் தமிழ் சினிமா பார்க்கும் நண்பர்கள் கூட ரஜினியின் பெண் யார் என்று எளிதாக யூகித்து விடுவார்கள்.

மேலும் இந்த திரைப்படம் slow screenplay அதனால் தான் நன்றாக இல்லை என ஒரு செய்தி உலாவருகிறது. என்னால் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனனில் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் கூட slow screenplay தான். ஆனால் மேக்கிங் and screenplay எவ்வாறு நம்மை ஆட்கொண்டது என்பது நமக்கே தெரியும். அதுவும் Interval sequence நம்மை சீட் நுனிக்கே கொண்டுசெல்லும்.

கபாலியில் பிடித்த விஷயம் வழக்கம் போல ரஜினியின் தெறி screen  presence மற்றும் ராதிகா அப்டேவின் உறுத்தாத நடிப்பு. தன் கணவனை 25 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் பார்த்தால் எப்படி அவளுடைய feelings இருக்கும் என்பதை கண்முன்னே நிறுத்தி உள்ளார்.

அதே போல் மெட்ராஸ் படத்தில் வந்த அத்தனை பேருக்கும் ரஞ்சித் ஒரு கதாபாத்திரம் கொடுத்து உள்ளார்.

அட்டகத்தி தினேஷ் தான் இந்த திரைப்படத்தின் comic relief. கலையரசன் character எல்லா டான் திரைப்படங்களில் வருவது போல தெரிந்த நம்மக்கு பரிச்சயமான ட்விஸ்டிற்கு பயன்பாடு உள்ளார்.

கபாலி வேலுநாயகர்,ராஜூபாய்,ஜனாபாய்,விஷவாபாய் செய்த பணியை மலேசியாவில் செய்து உள்ளார்.வேறு  எதுவும் புதிதாக இல்லை. BGM சந்தோஷ் நாராயணன் நெருப்புடவையே படம் முழுவதும் எரிய விட்டு உள்ளார்.


இத்தனை சருக்கலான screenplayயை எப்படி தாணு இத்தனை Promo செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு வேளை அதை உணர்ந்து தான் அப்படி செய்தாரோ என்னமோ.

கதாநாயகன் சாகும்படி எடுத்தால் நம் நாட்டு மக்களுக்கு என்ன தான் பிரச்சனையோ, தியேட்டரில் பல நபர்கள் ஐயோ தலைவர் அப்போ செத்துட்டாரானு புலம்புவது கேட்டது. இந்த ;உலகத்தில் பிறகும் அத்தனை பேரும் ஒருநாள் இறக்க வேண்டும் மக்களே.


Badsha வை போல இனிமேல் யாராலும் படம் எடுக்க முடியாது என ரஜினியே சொல்லியுள்ளார், அதே தான் நடந்து உள்ளது.

மொத்தத்தில் ரஜினிக்கு இந்த திரைப்படம் ஹாட்ரிக் ஆகக்கூட வாய்ப்பு உள்ளது கோச்சடையான், லிங்கா வரிசையில்.

-ராம்