Book My Iyer

http://bookmyiyer.com/

Saturday, July 23, 2016

கபாலி - இதுவும் அரசியல்

கபாலி கடந்த 2 வாரங்களாக தமிழகமே கூறிக்கொண்டு இருந்த ஒரு மந்திரம்.ஒரு திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பது சாதாரண விடயம். அதுவே ஒரு முன்னேறும் ஒரு டைரக்டர் மெட்ராஸ் போன்ற படத்தை இயக்கிய ஒருவர் படம் என்றால் சாதாரண ரசிகன் கூட அந்த திரைப்படம் எப்படி இருக்கும் என எண்ணுவான்.

அதே திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்னும் ரஜினிகாந்த் இணைந்ததால் எதிர்பார்ப்பு பன்மடங்கு ஆனது. ரஜினிகாந்த் படங்களுக்கு எப்பொழுதுமே தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு உண்டு ஆனால் இந்த படத்தை ஒட்டு மொத்த தென் தமிழகமே எதிர்பார்த்தது எப்படி ?

கலைப்புலி S .தாணு ரஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை தந்தவர். இதுவரை ரஜினியை வைத்து அவர் தயாரித்தது இல்லை. அதற்கு காரணம் அவர் முன்னாளில் சந்தித்த பல நஷ்டங்கள். ஆளவந்தான் தயாரித்து மரண அடிவாங்கியவர். பின்பு வணிகரீதியாக அவரை சிறிது எழுப்பி விட்டது சச்சின், காக்க காக்க மற்றும் மாயாவி போன்ற படங்கள் தான். தன் மகனை டைரக்டர்ஆக்கி தனக்கு தானே சூடு வைத்துக்கொண்ட படம் சக்கரைகட்டி.

அதன் பின் அவர் இன்று வரை செய்த மிக பிரம்மாண்டமான பிசகு கந்தசாமி. எப்படி சுசி கணேசன் இந்த கதையை ஓகே செய்தார் தாணுவிடம் என்பது இன்னும் புரியாத புதிர். அந்நியன்,ரமணா,இந்தியன் போன்ற படங்களை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்திவிட்டு கொஞ்சம் சூப்பர் ஹீரோ மாஸ்க்கை தூவினால் அது கந்தசாமி.

இந்த திரைப்படத்திற்கு பின் அவர் அடுத்த திரைப்படம் தயாரிக்க 3 வருடங்கள் ஆனது. துப்பாக்கி எப்பேர் பட்ட படம் என்பது எல்லோரும் அறிந்தது. தாணுவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சென்ற திரைப்படம் துப்பாக்கி. பின் தெறி மூலம் பழைய formku திரும்பினார்.

ரஜினியை வைத்து படம் எடுப்பதில் லாபமும் உள்ளது ரிஸ்கும் உள்ளது. தாணு செய்த ப்ரோமோ என்னவென்று நான் சொல்ல வேண்டியது இல்லை. aeroplaneஇல் போஸ்டர் அடித்தார்,சிம் கார்டு ரிலீஸ் செய்தார் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் உச்சம் இதுவரை யாரும் செய்யாதது இது தாணுவின் தந்திரம் என கூறலாம். படம் பப்படம் அவதால் தானே வசூல் வராது, சாமானிய ரசிகன் மிஞ்சிப்போனால் 120 அல்லது அதிகபட்சம் 200 வரை குடுத்து பார்ப்பான், ஆனால் IT company என்னும் கார்பொரேட் ???.

இப்பொழுதெல்லாம் படம் ஓடுவது முதல் மூன்று நாட்களே,ஓரளவு சுமார் என்றால் இன்னும் இரண்டு வாரங்கள் அவ்ளோதான் அந்த படத்தின் உயிர் நாடி.இதை தாணு முன்னாட்களில் வாங்கிய அடிகளின் பலனாய் நன்றாக புரிந்துகொண்டு படத்தை JAZZ சினிமாஸ் இடம் விற்றார், அது யாருடைய குரூப் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். படம் அரசிடமே உள்ளதால் எல்லா திரைஅரங்கம் ஒன்லைன் புக்கிங் 200,300 என்று விற்றனர். இதற்கு எதிராக தொடுக்க பட்ட பொதுநல வழக்கு ஈஸியாக தள்ளுபடி செய்யப்பட்டது.ஓன்லைனினிலேயே 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றால் பல தியேட்டர்கள் புக்கிங் ஓபன் செய்யவே இல்லை, நேராக சென்று டிக்கெட் விலை விசாரித்தால் 1000,2000 என கூறுபோட்டனர்.


So சாதாரண ரசிகன் எவ்ளோ காசு குடுத்து கண்டிப்பாக பார்ப்பதற்கு யோசிப்பான். கார்பொரேட் கம்பனிகளுக்கு bulk புக்கிங் செய்ய  வைத்தால். ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு வைத்தால் யோசித்து பாருங்கள்.

ரஜினி எனும் பொண் முட்டை இடும் வாத்தை தாணு 3 நாட்களில் அறுத்து உள்ளார். இதற்கு கண்டிப்பாக ரஜினியும் சப்போர்ட் செய்து இருப்பார்.

ரஜினி பழசை மறந்து இருக்க மாட்டார் என நம்புவோம், அவர் இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருப்பதற்கு கார்பொரேட் கம்பெனிகளோ அல்லது தாணுவோ காரணம் இல்லை, சாமானிய ரசிகனின் விசிலும்,கைதட்டலும் தான் அவரை இங்கே உட்கார வைத்துள்ளது.

இப்பொழுது படத்திற்கு நெகட்டிவ் ரெவியூஸ் வந்து கொண்டிருக்கிறது ஆனாலும் படம் நல்ல வசூலை கண்டிப்பாக பெரும். விமர்சனங்களுக்கும், மௌத் டால்க் இரண்டும் இந்த படத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.இப்பொழுது சாமானிய மக்களுக்கு டிக்கெட் வரும் திங்களில் இருந்துதான் கிடைக்கும், அதனால் கண்டிப்பாக இன்னும் இரண்டு வார இறுதிக்கு இந்த மொக்கை படம் ஓடும், அதை ஓட்டுவதற்கு தாணு கண்டிப்பாக ஒரு ப்ரோமோ ரெடி செய்திருப்பார்.

இத்தனை அரசியல் இந்த திரைப்படத்தை சூழ்ந்து உள்ளது, இது நம்மக்கு  தெரிந்த விடயங்கள், இன்னும் தெரியாத விடயங்கள் பல இருக்கலாம்.

எப்பொழுதும் தமிழன் நல்ல திரைப்படங்களை ஆதரிப்பான் இப்பொழுது கபாலி உங்கள் கையில்.

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் தாணுவும், ரஜினியும் பிளக்க மாட்டார்களா என்ன ?

-ராம்






Friday, July 22, 2016

கபாலி - Usual Gangster with no twists and turns.

நேற்று மதியம் வரை படம் பார்க்கும் எண்ணம் இல்லை. ஏன் என நண்பர்களுக்கு தெரிந்து இருக்கும். எல்லா திரையரங்குகளும் corporate கம்பனிகளுக்கு bulk புக்கிங் செய்து நன்றாக காசு பார்த்துவிட்டார்கள். 120 டிக்கெட்டை 500க்கு விற்றாயிற்று இனி படம் பப்படம் ஆனாலும் முதலுக்கு மோசம் இல்லை.ஆனாலும் குமரன் மேடவாக்கம் திரை அரங்கத்திற்கு என் நண்பருடன் சென்றேன்.




Gangster genre  என்றால் மிஞ்சிப்போனால் மூன்று வகை கதைகள் தான்  சொல்லமுடியும். நாயகன் அடிமட்டத்தில் இருந்து gangster ஆவது அதில் முதல் வகை உ.தா The Scarface ,புதுப்பேட்டை . இரண்டாம் வகை கதாநாயகனின் தந்தை ஒரு டான், அவருக்கு பின் அவருடைய மகன் அந்த பீடத்தில் ஏறுவது. இந்த வகை தான் உலகம் முழுவதும் அடித்து துவைத்து இன்றுவரை எடுக்கப்படுகிறது. Godfather,Sarkar Series, தேவர் மகன் (டான் பாத்திரத்தை ஊர் பெரியவர் என்று மாத்தினால் ). மூன்றாம் வகை  நாயகன் பெரிய DON  சில பல தந்திரங்களால் அவன் குடும்பம் அழிந்துவிடும் அவன் மீண்டு வந்து வில்லன்களை அழிப்பான்.

கபாலி மூன்றாம் வகை திரைப்படம் . இந்த ரக படங்களில் கதைகளில் பெரிய வித்தை காட்ட இயலாது ஆனால் screenplayஇல் பல வித்தைகள் செய்யலாம். கபாலி இந்த இடத்தில்தான் பெரிதாக சறுக்கி உள்ளது.

Predictable screenplay என்று சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு ரஜினி தன் பெண்ணை தேடி அலைவார், அவரிடம் ஒரு பெண் அப்பா என்று உருகும், அதே நேரத்தில் அசாசின் பெண் ஒருவர் ரஜினியை கொள்வதற்கு சுற்றிக்கொண்டு இருப்பாள். இந்த scenarioவை ஒரு ஆங்கில படம் பார்க்கும் அல்லது நம் தமிழ் சினிமா பார்க்கும் நண்பர்கள் கூட ரஜினியின் பெண் யார் என்று எளிதாக யூகித்து விடுவார்கள்.

மேலும் இந்த திரைப்படம் slow screenplay அதனால் தான் நன்றாக இல்லை என ஒரு செய்தி உலாவருகிறது. என்னால் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனனில் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் கூட slow screenplay தான். ஆனால் மேக்கிங் and screenplay எவ்வாறு நம்மை ஆட்கொண்டது என்பது நமக்கே தெரியும். அதுவும் Interval sequence நம்மை சீட் நுனிக்கே கொண்டுசெல்லும்.

கபாலியில் பிடித்த விஷயம் வழக்கம் போல ரஜினியின் தெறி screen  presence மற்றும் ராதிகா அப்டேவின் உறுத்தாத நடிப்பு. தன் கணவனை 25 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் பார்த்தால் எப்படி அவளுடைய feelings இருக்கும் என்பதை கண்முன்னே நிறுத்தி உள்ளார்.

அதே போல் மெட்ராஸ் படத்தில் வந்த அத்தனை பேருக்கும் ரஞ்சித் ஒரு கதாபாத்திரம் கொடுத்து உள்ளார்.

அட்டகத்தி தினேஷ் தான் இந்த திரைப்படத்தின் comic relief. கலையரசன் character எல்லா டான் திரைப்படங்களில் வருவது போல தெரிந்த நம்மக்கு பரிச்சயமான ட்விஸ்டிற்கு பயன்பாடு உள்ளார்.

கபாலி வேலுநாயகர்,ராஜூபாய்,ஜனாபாய்,விஷவாபாய் செய்த பணியை மலேசியாவில் செய்து உள்ளார்.வேறு  எதுவும் புதிதாக இல்லை. BGM சந்தோஷ் நாராயணன் நெருப்புடவையே படம் முழுவதும் எரிய விட்டு உள்ளார்.


இத்தனை சருக்கலான screenplayயை எப்படி தாணு இத்தனை Promo செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு வேளை அதை உணர்ந்து தான் அப்படி செய்தாரோ என்னமோ.

கதாநாயகன் சாகும்படி எடுத்தால் நம் நாட்டு மக்களுக்கு என்ன தான் பிரச்சனையோ, தியேட்டரில் பல நபர்கள் ஐயோ தலைவர் அப்போ செத்துட்டாரானு புலம்புவது கேட்டது. இந்த ;உலகத்தில் பிறகும் அத்தனை பேரும் ஒருநாள் இறக்க வேண்டும் மக்களே.


Badsha வை போல இனிமேல் யாராலும் படம் எடுக்க முடியாது என ரஜினியே சொல்லியுள்ளார், அதே தான் நடந்து உள்ளது.

மொத்தத்தில் ரஜினிக்கு இந்த திரைப்படம் ஹாட்ரிக் ஆகக்கூட வாய்ப்பு உள்ளது கோச்சடையான், லிங்கா வரிசையில்.

-ராம்



























Wednesday, July 13, 2016

பயமுறுத்தும் வாடகை கார்கள்! - ’ஓலா’ வண்டியும், ஒரு பெண்ணின் ’திகில்’ அனுபவமும்

I have taken this post from Tamilweb dunia website. This is an experience of Vishalini Ramani. She shared her scaring experience in the Facebook.


ஒரு தனி இரவில், தனது தனியான பயணத்தில் வாடகை கார் நிருவனமான ‘ஓலா’வில் ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை வேதனையுடன் தனது முகநூல் பக்கத்தில் விசாலினி ரமணி என்பவர் விளக்கியுள்ளார்.

இது குறித்த அவரது முகநூல் பதிவு கீழே:
இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் பதிவுசெய்து கொடுத்தான். நல்ல வேளையாக வீட்டிலிருந்து ஏறாமல், பக்கத்தில் ஒரு கடையிலிருந்து ஏறினேன். கார் எடுத்த எடுப்பிலேயே படு வேகம். உடல் நலம் சரியில்லையென்று மெதுவாகப் போகச் சொன்னேன். ட்ரைவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
மத்ய கைலாஷ் கடந்து கிண்டி மேம்பாலத்தில் கார் மேலேறியதும், கீழிறங்கியதும் முன்பைவிட மோசமான வேகத்தில்தான். மீண்டும் ட்ரைவரிடம் நிதானமாகப் போகச் சொன்னதற்கு மரியாதையின்றி குரலை உயர்த்திப் பேசினான். நான் அதைச் சுட்டிக்காட்டி இப்படி வாடிக்கையாளரிடம் பேசுவது சரியல்ல, கம்பெனியில் புகார் செய்ய வேண்டிவரும் என்றதற்கு வண்டியை நிறுத்தி, பின்னாடி மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு எவனாவது வருவான், அவனுடன் போ என்று ஒற்றையில் விளித்ததோடல்லாமல் இரவு பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டான். நானும் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் இறங்கிவிட்டு வேறு வாகனத்திற்காகக் காத்திருந்தேன்.
இதற்கிடையில் கார்த்திக்கை அழைத்து நடந்ததை விவரித்து ஓலா அப்ளிகேஷனில் 'சேவை மோசம்' என்று புகார் அளிக்கச் சொன்னேன். இதெல்லாம் நடந்தபொழுதும் அந்தக் கார் அங்கேயே நின்றுகொண்டிருக்கவும் எனக்கு லேசாக பயமெழ ட்ரைவர் காரிலிருந்து இறங்குகிறானா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஆட்டோ வரவும் அவருடன் சவாரி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது அந்த ட்ரைவர் என்னருகில் வந்து நின்றதை கவனிக்கவில்லை. வந்தவன் எந்த மரியாதையுமின்றி 'காசு எவ தருவா' என்று ஆரம்பித்தான். நான் அவனிடம் சற்று கடுமையாக 'இறக்கிவிட்டது நீதான். ஒழுங்காகவும் வண்டி ஓட்டவில்லை. கம்பெனியில் புகார் அளித்தாகிவிட்டது, வம்பு செய்யாமல் போய்விடு,' என்றதற்கு அசிங்கமாக என்னைப் பார்த்துக் கை ஓங்க வந்தான்.
உடனே நான் அந்த ஆட்டோக்காரரிடம் வண்டியை வேகமாக எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே ஏறுவதற்குள், 'கழுத்தை அறுத்துடுவேன், தெரியுமா?' என்று படு பயங்கரமாக முகத்தை வைத்துக்கொண்டு மிரட்டினான். அவன் கையில் ஆயுதம் எதுவும் இருந்ததா என்றுகூட கவனிக்கத் தெம்பில்லாமல், அந்த அரையிருளில் கவனிக்கவும் முடியாமல், 'அப்படி எதுவும் செய்துவிட முடியாது, நான் நேராக போலீசிடம் புகார் அளிக்கப்போகிறேன்' என்றதற்கு, என்ன வேண்டுமானாலும் செய்துகொள், போடி என்று அசிங்கமாக சைகை காண்பித்தான். அதற்குள் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டேன். பின்னாலேயே அவனும் காரைக் கிளப்பி வந்துகொண்டிருந்தான்.
மணி பத்தரை போல் இருக்கும். வழியில் தென்படும் பேட்ரோலிங் போலீஸ் யாராவது கண்ணில் பட்டால் உடனே அங்கேயே புகார் அளிக்கலாம் என்றால் ராமாவரம் சிக்னல் வரை யாரும் கண்ணில் படவில்லை. வீடு வரை தனியாகச் செல்வது பாதுகாப்பில்லை என்று போலீஸிடம் சென்றால் அவர்களும் அக்கறை இருப்பதுபோல் பத ட்டமடைந்து உடனேயே என்னை பத்தரை மணிக்கு நந்தம்பாக்கம் காவல் நிலையத்திற்கு போகச் சொன்னார்கள்.
அங்கு சென்றால், 'சம்பவம் நடந்த இடம் கிண்டி, நீங்கள் இப்பொழுதே அங்கு செல்லுங்கள்' என்று ஆட்டோ ட்ரைவரிடம் வழியெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் கிண்டிக்கும் எத்தொடர்புமில்லை, ஏன் அந்த கார் ட்ரைவரும்கூட அங்கிருக்க மாட்டான் என்று கெஞ்சியும், நடந்த விஷயத்தின் பயங்கரத்தை எடுத்துரைத்தும் எப்பலனுமில்லை. துணைக்கு ஒரு ஏட்டை வீடு வரை அனுப்புகிறோம் என்று கடைசியாகக் கூறிவிட்டு ஆட்டோ ட்ரைவரிடம் ஏட்டை மறுபடியும் ஸ்டேஷனில் கொண்டுவந்துவிட கட்டளையிட்டார்கள்.
கிட்டத்தட்ட பதினோரு மணிக்கு 'கழுத்தை அறுத்துடுவேன்' என்கிற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்க வேறு ஏதேதோ கடந்தகால செய்திகளும் சம்பவங்களும் மண்டைக்குள் குடைய அவனை மாதிரி கிரிமனல்களுக்காக கோர்ட் கேஸ் என்று அலைந்து திரிந்து எஞ்சியிருக்கும் வாழ்க்கையையும் தொலைக்க மனமில்லாமல் ஒருவித அருவருப்புடனும் மனக்கொந்தளிப்புடனும் எஞ்சிய இரவு கழிந்தது.
நாளை அவனை மாதிரி பொறுக்கி எவனாவது நிஜமாகவே கழுத்தை அறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தக் கொடிய சாவின் பயத்தை விடவும் சாவுக்குப் பின்னான காரணங்களை கட்டவிழ்த்துவிடவிருக்கும் கற்பனைகள் அதைவிடவும் கோரமானதாக இருக்கப்போகிறதோ என்றெல்லாமும் சிந்தனைகள் சிதறிய வண்ணம் இருக்கிறேன். ஒவ்வொரு ஆணுடனுமான, தெரிந்தவன், தெரியாதவன் யாராயினும், வாக்குவாதங்களில் எந்தளவு உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தால் சோர்ந்துதான் போகிறது மனம்.
இங்கு காவற்துறை இருக்கிறதுதான். தன் கடமையையும் செய்கிறதுதான். ஒருவேளை அவர்கள் அகராதியில் கடமையென்பது செத்ததற்குப் பிறகான அக்கறையாக இருக்கலாம். நான் அதற்கு இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, July 7, 2016

சுல்தான் - Briyani for this ED



ஸ்போர்ட்ஸ் genre படங்களுக்கு என்றுமே பாலிவுட்டில் தனி இடம் உண்டு. அதுவும் அதில் தங்கள் மனதிற்கு பிடித்த மாஸ் ஹீரோ என்றால் ஜோர் தான்.

சுல்தான் படம் ஒன்றும் இந்திய வரலாற்றில் புதுமை செய்ய போகும் திரைப்படம் இல்லை .
சல்மான் branded ஸ்போர்ட்ஸ் genre.சல்மான்கானிடம் அவரது ரசிகர்கள் என்ன என்ன எதிர் பார்ப்பார்கள் என்று நன்றாக புரிந்து வைத்துள்ளார்.

கதை என்று பார்த்தால் இது ஒரு comeback type movie. இந்த genre எல்லா கதைகளிலும் சொருகிவிடலாம். உதாரணத்திற்கு பல ரஜினி படங்கள், ரஜினி பெரிய ஜமீன்தார் இல்லாவிடில் ஒரு நல்ல மனிதர், ஊரே அவரை மதிக்கும், அவருக்கு ஒரு டாவு இருக்கும். திடீரென்று வில்லன் முளைத்து ரஜினியை போண்டி ஆக்குவார். இன்டெர்வல் ப்ளாக்கிற்கு தலைவர் பன்ச் அடித்து இரண்டாம் பாதியில் ஏப்படி இழந்ததையெல்லாம் மாஸ்ஆக மீட்பார், என்று ஒரு வகை clicheவாக செல்லும் இந்த genre.

இப்போது ரஜினிக்கு பதில் சல்மான்,வில்லன்க்கு பதில் குஸ்தி அப்பறம் கொஞ்சம் family சென்டிமென்ட் ,comedy ,ஹீரோ ஹீரோயினிக்கு மனஸ்தாபம், கடைசியில் இருவரும் இணைவர் என படு clicheவாக செல்கிறது இந்த சுல்தான்.



Performance என்று பார்த்தால் சல்மான் கான் ஹ்ம்ம் ரஜினி,MGR,விஜய் படங்களில் ஹீரோ என்ன செய்வாரோ அதையே செய்கிறார். பாட்டிகளிடம் அன்பாக இருக்கிறார்,ஸ்கூல் குழந்தைகளுக்கு லிப்ட் கொடுக்கிறார், அப்பறம் ஹீரோவின் தலையாய கடமையான  பார்த்த உடனே அனுஷ்க்கா ஷர்மாவை லவ்வுகிறார். காதலிக்காக வெறும் முப்பதே நாளில் குஸ்தி கற்றுக்கொண்டு State,National,Olympic என அடித்து நொறுக்குகிறார். இன்னும் கடைசி 30 நிமிடங்களில் MMA (Mixed Martial Arts ) அதையும் நான்கே வாரங்களில் கற்றுக்கொள்கிறார்.

சல்மான் English தடுமாறும் போது அவருடைய நண்பர் English -Hindi புக் ஒன்றை கொடுப்பார். அதேபோல குஸ்தி,MMAகும் எங்கு புக் வாங்கினார் அதுவும் ஒலிம்பிக் ஜெயிக்கும் அளவுக்கு.

நான் கூட குஸ்தியும்,MMAவும் எப்படி ஒரு மாதத்தில் கற்று கொள்வது அதற்கு புக் ஏதும் உண்டா என யோசித்து கொண்டிருக்கிறேன்.

Commercial படத்திற்காக இன்னும் எதெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமோ.

 

நல்ல ஹீரோயின் ஸ்கோப் உள்ள character நன்றாகவே செய்துள்ளார். குஸ்தி போட்டுள்ளார்,அம்மா சென்டிமென்ட்,சல்மானை வெறுப்பது பின் கடைசியில் உருகுவது என அசத்தி உள்ளார் .




ஹீரோ துவந்து இருக்கும் போது come on என்று உசுப்பேத்தி நீ ஜெயிக்க பொறந்தவன் என்று கத்தும் ஒரு trainer character இது போன்ற படங்களில் வந்தே ஆக வேண்டும். இந்த படத்தில் அந்த character ரந்தீப் ஹூன்டா. சில்வேர்ஸ்டெர் ஸ்டாலோன் செய்ய வேண்டிய பாத்திரம் கடைசியில் இவர் செய்துள்ளார். நன்றாகவே நடித்துள்ளார்.

Camera எல்லாம் எப்பொழுதும் சல்மான்கானையே சுத்தி சுத்தி வந்துள்ளது. பாடல்கள் நன்றாகவே உள்ளது. அதில் என் favourite jag ghoomeya, simple step ஐ கூட எல்லோரும் ரசிக்கும் படி செய்பவர் சல்மான், இதிலும் அப்படியே.

https://www.youtube.com/watch?v=6TPcwWHZN_0 



மொத்தத்தில் முன்னர் சொன்ன குறை ஒன்றும் திரையரங்கினில் சுத்தமாக தெரியவில்லை. அதற்கு காரணம் சல்மானின் screen presence, comic dialogues and songs.

ஹீரோதான் எப்படியும் ஜெயிக்க போகிறார், அதுவும் அடிவாங்கியபின் theme ம்யூசிக் எல்லாம் தெறிக்க விட்டு எழுந்து வந்து சரமாரியாக குத்து விடுவதை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை இது போன்ற படங்கள் வசூலை வாரிக்குவிக்கும் என்பது நிதர்சனம்.

சுல்தான் - பழைய பிரியாணி என்றாலும் நல்ல ருசி தான்.


-ராம்