Book My Iyer

http://bookmyiyer.com/

Friday, August 12, 2016

The Killing Series | சுவாதி மர்டர் கேஸ்
NO MAN CAN HOPE TO FIND OUT THE TRUTH WITHOUT INVESTIGATION.ஒரு Investigation அதாவது ஒரு கொலை நடந்து உள்ளது, அந்த கொலையை எப்படி போலீஸ் கண்டுபிப்பார்கள் இதுதான் PLOT. இது நம்மக்கு தெரிந்த கதை என்று என்று உதாசீனப்படுத்த முடியாது. இதுவரை நம்மக்கு தெரிந்த இன்வெஸ்டிகஷன் அதாவது படத்தில் இருந்து நாம் தெரிந்து கொண்ட இன்வெஸ்டிகஷன் எப்படி இருக்கும், யாரேனும் ஒருவர் கொலை செய்யப்படுவர், அந்த இடத்துக்கு போலீஸ் வரும், அது ஒருவேளை ஹீரோவாக கூட இருக்கலாம், இல்லை  என்றால் ஹீரோ சம்மந்தமே இல்லாமல் அந்த இடத்திற்கு வருவார் திடீர் என்று அவருக்குள் இருக்கும் சூப்பர் ஸ்கில்லை யூஸ் செய்து கொலையாளியை கண்டுபிடிப்பார். இந்த காட்சிகளெல்லாம் ஒன்று Intro அல்லது Interval சீன்களுக்காக பயன்படுத்தப்படும்.

ஆனால் உண்மையில் எத்தனை சம்பவங்கள் அந்த கொலைகளில் ஒளிந்து கொண்டிருக்கின்றன, எத்தனை வலி, துன்பம்,அவமானம். இதெல்லாம் நம் திரைப்படங்களில் விரிவாக அலசப்படுவதில்லை ஒன்று இரண்டு திரைப்படங்களை தவிர அதுவும் முழுமையாக இல்லை.


உதாரணத்துக்கு நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை சம்பவம், நடந்து எத்தனை நாள் கழித்து கொலையாளியை பிடித்தனர் ? . இன்னும் பிடிபட்ட  நபர்  தான் கொலையாளியா என்ற சந்தேகம் வேறு நிலவுகிறது. இந்த உதாரணத்தை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் இந்த சம்பவம் தான் நம்மில் பலருக்கு நினைவு இருக்கிறது, இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நாம் இதையும் மறந்து விடுவோம் அல்லது மறக்கடிக்க படுவோம்.

நம்  தமிழ்நாட்டில் கடந்த 3 வருடங்களில் 81 கௌரவ கொலைகள் இது கணக்கில் வந்தது வராதது ? .உடுமலைப்பேட்டையில்  ஷங்கரை நடுரோட்டில் வெட்டியது நம்மில் எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது.கமலஹாசன் சொல்வது போல மறதி நம் தேசிய வியாதி.


என்னால் எப்படி இந்த சீரிஸ்ஐ ஸ்வாதி murder உடன் லிங்க் செய்ய முடிந்தது என்றால், இந்த சீரிஸ் நான் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது.

ஒரு குடும்பத்தில் சாதாரண மரணம் ஒன்று சம்பவித்தாலே அந்த குடும்பத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம். அதுவே ஒரு கொலையாக அதுவும் ஒரே மகளாக இருந்தால் அந்த குடும்பம் அந்த இழப்பில் இருந்து வெளிவர முடியுமா அப்படியே வந்தாலும் அதற்கு எத்தனை வருடங்கள் ஆகும்.  கொலை செய்தவனை பழிவாங்கியபின் டூயட் பாடுவது எல்லாம் சினிமாவில்தான்.

இதே இடத்தில் ஸ்வாதியை பொருத்தி பாருங்கள், ஒரு சாதாரண காலை நேரத்தில் ரயில்வே நிலையத்தில் வெட்டி கொல்லப்படுகிறாள். அவளை ட்ராப் செய்துவிட்டு போன தந்தையின் நிலை, வீட்டில் உள்ளவர்களின் மனநிலை ?

இவை அனைத்தும் இந்த கில்லிங் சீரிஸ் இல் மிகவும் நேர்த்தியாக காண்பித்து உள்ளனர். உதாரணத்திற்கு நம்மக்கு தெரிந்தவரின் மகளோ அல்லது தங்கைக்கோ இப்படி நடந்தால், முதலில் நாம் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வோம் அவர்களுக்கு உதவவே நம்மக்கு பயமாய் இருக்கும் காரணம் போலீஸ் விசாரணை.

போலீஸ் நம்மை ஒரு சம்பவத்தை பற்றி விசாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அதிலும் நாம் அதில் முதல் சஸ்பெக்ட் என்றால் அவர்கள் treatment எப்படி இருக்கும். நாம் வேலை பார்க்கும் இடத்தில் நம்மை எப்படி மதிப்பார்கள் ? நாம் நிரபராதி என்று உறுதி ஆனா பின்கூட நம்மால் முன்னைப்போல் சுதந்திரமாக சுற்றித்திரியமுடியுமா ?

சும்மா வேலை பார்க்கும் இடத்தில் ஒரு escalationஆகி மேனேஜர் நம்மை அவர் கேபினில் கிழித்து அனுப்பியபின்னே நம் சக ஊழியர்கள் நம்மிடம் மீண்டும் ஒரு வேலையை தர சில நாட்களுக்கு தயங்குவர். இந்த சாதாரண விடயத்துக்கே இத்தனை விளைவுகள் என்றால் ?

அடுத்து போலீஸ் துப்பறியும் முறை இதில் அட்டகாசமாய் படமாக்கி உள்ளனர். போலீஸாரும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு. எந்நேரமும் இன்வெஸ்டிகஷன் இல் இருக்கும் ஒருவர் எப்படி தன் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க முடியும். இதில் ரோஸி கேஸ் handle செய்யும் Sara என்னும் பெண் தன்னுடைய சிறுவனிடம் நேரம் ஒதுக்கமுடியாமல் தவிக்கிறாள்.

அதே போல் இறந்தவரின் நண்பர் நீங்கள் என்றால் அவருக்கும் உங்களுக்கும் உள்ள எல்லா அந்தரங்கங்களும் போலீஸ் விசாரணையில் வெளிவரும், அதை பத்திரிகைகள் தங்கள் இஷ்டத்திற்கு பிரசுரம் செய்வார்கள். உதாரணம் பிலால் மாலிக்.


அதேபோல் இறந்தவரை இறப்பதற்கு முன் அவர் செய்த அத்தனை செயல்களும் சோசியல் மீடியா கண் முன்னே வரும். உதாரணம் ஸ்வாதி பற்றி தற்பொழுது எழுதப்படும் நியூஸ்சே போதும்.


வெறும் கொலை துப்பறிதல் பற்றி சொல்லாமல், அவர்களுடைய பீலிங்ஸ் பற்றி கூறி இந்த சீரிஸ் என் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. சீசன் 1& 2 மிகவும் த்ரில்லிங் ஆக நீங்கள் உணர்வீர்கள்.

ஒரு பெண் இருந்தாலும் அவர்களை பற்றி அவதூறு பேசும் நபர்கள் இறந்தாலும் விடமாட்டார்கள்.

காதலிப்பவனை நிராகரித்தால் அவன் வெட்டுவான் அல்லது ஆசிட் அடிப்பான், சரி அவன் கரம் பிடித்தால் பெற்றோர்கள் கௌரவம் என்னும் காரணம் காட்டி வெட்டுவர். பாவம் இந்த பெண் என்ன தான்  செய்வாள்.

-ராம்