Book My Iyer

http://bookmyiyer.com/

Tuesday, June 28, 2016

Metro - A different attempt but with bad casting.

தற்போதைய நுங்கம்பாக்கம் சுவாதி கொலை கேஸ் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அதே போல சற்றுறும் மனிதாபிமானம் இல்லா மனிதர்களை பற்றிய படம் இந்த மெட்ரோ .


Chain Snatching என்பது நம்மை பொறுத்தவரைக்கும் செய்தித்தாளில் நான்காம் பக்கத்தில் வரும் ஒரு செய்தி. அந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்று இயக்குனர் சிறிது ஆராய்ந்து நம்மக்கு தந்து உள்ளார்.

இத்தனை ஆராய்ச்சி செய்தவர் ஏன் castingஇல் கோட்டை விட்டார் என்பது அவருக்கே உத்தமம்.முக்கியமாக நாயகன் சிரிஷ் முகத்தில் சுத்தமாக expression இல்லை. தேமே என படம் முழுவதும் நிற்கிறார் நடக்கிறார் . இவர் ஒரு நடமாடும் set property போல படம் முழுவதும் சுத்திவருகிறார்.வில்லன் இவர் தம்பி அவர் அதற்கு மேல் கெத்தாக செய்ய வேண்டிய ஒரு கதாபாத்திரம், சும்மா bike வேணும்னு அடம் பிடிக்கிறார், அவர் அண்ணன் லோன் apply செஞ்சு வாங்கித்தரேன்னு சொன்ன அப்பறம் ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரு  பாருங்க oscar உங்களுக்கு தான் பாஸ்.பாப்பி சிம்ஹா ஒரு ரோல் பைக்கில் வருவார் டீல் பேசுவார், பிளான் போடுவார் அவ்ளோதான்.

Chain snatch ரூல்ஸ்ஐ நன்றாக எடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் மூலம் நாம் நம்மை எப்படி பாதுகாத்து கொள்ளவது என கற்றுக்கொள்ளலாம். 

படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றால் Camera மற்றும் bgm. படத்தின் பெரிய பலம் இவைகள் தான். Bird eye  view to  neutral shots மிகவும் அட்டகாசம்.

இந்த திரைப்படத்தில் எப்படி ஒருவன் நிழல் உலகத்தில் விழுகிறான் என்பதை இயக்குனர் நன்றாக handle செய்துள்ளார். இருக்கறதை வைத்துக்கொள்ளாமல் அதிகமாக பேராசை கொள்ளவதால் தான் எல்லா தவறும் நடக்கிறது. நம் நாட்டில் நடக்கும் எல்லா தவறுக்கும் பேராசையே காரணம்.திருடுவதில் கூட பேராசை.


படத்தில் பிடித்தவை :
1. Camera 
2. BGM 
3.New Concept 


எரிச்சலூட்டியவை :
1. Immature acting by lead actors 
2. Making and  screenplay.


இந்த படத்தின் மூலம் இயக்குனர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன தான் கதை நன்றாக இருந்தாலும் lead actors should perform well or else it is a  waste of time and money .


-ராம்  
 

Monday, June 20, 2016

குழலோசை - Music which joins us.


நம் நாட்டில் ஓழிக்க முடியாத பல விடயங்களில் ஒன்று ஆதரவற்ற குழந்தைகள். இந்திய அரசின் முக்கியமான கொள்கை அனாதை ஆசிரமங்கள் இல்லா இந்தியாவை உருவாக்குவது.

நான் ஏன் ஓழிக்க முடியாது என்று கூறினேன் என்றால், நம் நாட்டில் 20 மில்லியன் அதாவது 20 கோடி ஆதரவற்ற சிறார்கள் உள்ளனர். நம் நாட்டின் மொத்த  மக்கள் தொகையில் நான்கு விழுக்காடு, இதில் கேவலமான செய்தி 0.3%  பெற்றோர்கள் இறந்ததனால் ஆதரவற்றவர்கள் மற்றவர்கள் தெய்வத்துக்கு சமம் என நாம் வணங்கும் பெற்றோர்களால் புறக்கணிக்க பட்டவர்கள். தங்கள் இளம் பருவத்தில் அவர்கள் செய்யாத பாவங்களுக்கு தங்கள் பெற்றோர்களால் கைவிட பட்டவர்கள்.

இவர்களுக்கு நாம் என்ன செய்துவிட்டோம். மிஞ்சிப்போனால் 100 அல்லது 200 ரூபாய். வீடு தேடி வந்து நாங்கள் ஒரு ஆசிரமத்தில் இருந்து வருகிறோம் என்று குரல் கேட்டாலே கதவை அவர்கள் மொகரையில் சாத்திவிட்டு உள்ளே ஓடுவோம். அதற்கு நாம் சொல்லும் விளக்கம் "இவனுங்க எல்லாம் பிராடு காச அவன் ஜோப்புலையே போட்டுப்பான்". இந்த வசனத்தை நம் குழந்தைக்கு கூட அச்சிரம் பிசுகாமல் சொல்லிக்குடுப்பது நம் பராம்பரியம்.


குழலோசை  இந்த NGOக்கு ஏன் இந்த பெயர், இந்த உலகில் பல மொழி,ஜாதி,மதம் என பல பிரிவினர் இருந்தாலும் அத்தனை நபர்களுக்கும் புரியும் ஒரு மொழி இசை தான்.எப்படி ஒரு குழலில் இருந்து ஒரு ஓசை அத்தனை பேரையும் இணைகிறதோ அதே போல் நாம் அனைவரும் இணைந்து சேவை செய்வோம் என்பது  இவர்கள் மோட்டோ.

நானும் இந்த 200 ரூபாய் கோஷ்டிதான். சேவை செய்ய ஆசைதான் ஆனா சோம்பேறி. இப்பொழுது இருக்கும் இளசுகள் கொஞ்சம் சோம்பேறி தான் ஏனென்றால் வேலை பளு அதுவும் IT பசங்க நாங்க பாவம் வாரம் இரண்டு நாள் விடுமுறைல எவ்ளோ தான் பண்றது இதுல சேவை உப்புமான கொஞ்சம் கடுப்பு அவ்ளோதான் பட் வீ ஆர் குட் பாய்ஸ்.

என் மனைவியின் நண்பன் இந்த குழுவை ஆரம்பிக்கும் பொழுது முதல் சேவைக்கு நங்கள் கோரடூர் சென்றோம். வெறும் 15 பேருடன் இந்த சேவையை ஆரம்பித்தவர் ராஜேஷ் மணிவாசகம். இவர் தான் இந்த குழுவின் தலைவர்.

எங்களால் முடிந்ததை முதலில் செய்தோம்.இப்பொழுதும் எப்பொழுதும் நாங்கள் என்றும் புது துணியோ அல்லது அன்றைய மதிய உணவை மட்டும் கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.

முதலில் நாங்கள் தேர்வு செய்யும் ஆசிரமம் வசதி உள்ளதாக இருக்காது. முதலில் நாங்கள் அவர்களிடம் கேட்பது இப்பொழுது உங்கள் அத்தியாவசிய தேவை என்ன ? அதை எங்களால் முடிந்தவரை நிறைவேற்றுவோம். அன்றைய மதிய உணவு எங்களுடையது. Ok உணவு மட்டும் கொடுத்தால் போதாதே செவிக்கும் கண்களுக்கும் விருந்து இல்லாமல் இருந்தால் எப்படி.
ஆடல் பாடல் குழு குலலோசையில் உள்ளது.


ஆடல் பாடல் நிகழ்ச்சி செய்வதும் நாங்களே.முதலில் 15இல் இருந்த எங்கள் கணக்கு இப்பொது 150ஐ நெருங்கி வருகிறது.

ஒரு வருடத்தில் 7 ஆசிரமத்தில் நாங்கள் சேவை செய்து உள்ளோம். சேவை செய்தபின்னும் நங்கள் இன்னும் எல்லா home இடமும் தொடர்பில் உள்ளோம். 

நாங்கள் சேவை தான் செய்வோம் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. பிளாஷ் மோப் தெரியுமா சூர்யா 7ஆம் அறிவு படத்தில் ஆடுவரே remember ?


இதுவரை 3 பிளாஷ் மோப் எங்கள் குழு ஆடி உள்ளது ஆடல் பாடல் என் இலாகா இல்லை அதனால் நான் எஸ்கேப் ஆயிடுவேன்.

முதல் பிளாஷ் மோப் தேங்கு awarness பற்றியது,இரண்டவது ஹெல்மெட்,மூன்றாவது 100% vote.
ஒரு வருட விழாவை Egmore museum ஹாலில் வெற்றிகரமாக முடித்து உள்ளோம்.அடுத்ததாக முதல் முறையாக எங்கள் சிறகுகள் சென்னையை தாண்டி vellore வரை விரிகிறது. 

இந்த குழு மென்மேலும் வளர உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை.

உங்களால் முடிந்த தொகையை கொடுங்கள் உங்களையும் விடாமல் எங்கள் கூட்டில் உங்களையும் இணைத்து கொள்வோம்.


தொடர்பு :
ராஜேஷ் :7845387565

-ராம் 

Friday, June 17, 2016

99வது கிலோமீட்டரில் ..

இந்த பதிவு whats app மூலம் வந்த ஒரு forward மெசேஜ் என்னுடைய அனுபவம் இல்லை.


சென்னையில் இருந்து திருச்சி போகும் பிரதான சாலையில் சரியாக 99வது கிலோமீட்டரில் மேல்மருவத்துார் தாண்டி அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது 99 கிலோமீட்டர் காபி ஷாப். கடந்த வாரம் அந்த வழியாக போகும் போது அந்த காபி ஷாப் போயிருந்தேன். வாசலில் இருந்த ஒரு போர்டு வித்தியாசமாகப்பட்டது.அதில் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவை ரோட்டில் ஆபத்தான முறையில் நின்று சாப்பிடாமல், எங்களது உணவகத்தில் எவ்வித கட்டணமுமின்றி உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிடலாம், இங்குள்ள பிற வசதிகளையும் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதப்பட்டு இருந்தது.
வழக்கமாக வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுப்பொருள்களுக்கு இங்கு அனுமதி கிடையாது என்றுதான் எழுதிப்போட்டிருப்பர் ஆனால் இது வித்தியாசமாகவும் நல்லவிதமாகவும் இருக்கவே உணவகத்தின் உரிமையாளர் மனோகரனுக்கு பாராட்டு தெரிவித்தேன்.
இந்திய ராணுவத்தின் விமான பிரிவில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர் திரும்பியவர் நாலு பேருக்கு பயன்படும்படியான தொழில் துவங்கலாம் என்று யோசித்து இந்த உணவகத்தை துவங்கியுள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன் இட்லியும் காபியும் மட்டும் விற்கும் உணவகமாக இருந்தது, இன்றைக்கு இந்த வழியாக செல்லும் இசை அமைப்பாளர் இளையராஜா முதல் இயக்குனர் மிஷ்கின் வரை சாப்பிட்டுவிட்டு செல்லும் அளவிற்கு உணவகம் வளர்ச்சியடைந்துள்ளது.
காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இயங்கும் இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவுகள் மட்டும் தயாரித்து விற்கப்படுகிறது. வெந்தயகளி, வாழைப்பூ வடை, குதிரைவாலி பொங்கல், வரகரிசி சாப்பாடு, தினை பாயசம், சிறுதானிய சப்பாத்தி என்று மெனு நீள்கிறது. அதுவும் நியாயமான விலையில். எல்லா பலகாரமும் கண் எதிரே சுடச்சுட தயாராகி வருகிறது. மண் கலயத்தில் வழங்கப்படும் பனங்கல்கண்டு மூலிகைப்பால் சுவையே தனி.
இங்கு பாரம்பரிய தானியங்கள் விற்பனையும் செய்யப்படுகிறது.ஒரு புத்தககடையும் இருக்கிறது. பழக்கடை மற்றும் பழங்கால பித்தளை செம்பு பொருட்கள் விற்பனையும் உண்டு. பிளாஸ்டிக் மட்டும் கிடையாது.
இருபதிற்கும் அதிகமாக கிராமத்து பெண்கள்தான் இங்கு வேலை செய்கின்றனர். இவர்களைப் போல இன்னும் பல கிராமத்து பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காவே இந்த உணவகத்தை விரிவுபடுத்திக்கொண்டே போகிறேன்.
சென்னையை விட்டு வெளியே வரும்போதும், உள்ளே போகும் போதும் நல்ல சூழ்நிலையில் நமது பாரம்பரிய உணவை மக்கள் குடும்பத்தோடும் குதுாகலத்தோடும் சாப்பிட்டுவிட்டு செல்லவேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று சொன்ன மனோகரன், உணவகத்தைவிட்டு கிளம்பும் குழந்தைகள் கையில் இரு சிறு மண் பாத்திரங்களை இலவசமாக கொடுக்கிறார்.
ஒன்றில் தண்ணிரும், ஒன்றில் சிறுதானிய உணவும் நிரப்பி உங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்துவிடுங்கள், வெயிலில் காலத்தில் பசியோடும் தாகத்தோடும் பறக்கும் பறவைகள் இதனை சாப்பிட்டு சந்தோஷப்படும் என்கிறார், குழந்தைகள் சந்தோஷமாக தலையாட்டி வாங்கிக்கொண்டனர்.


திரு.மனோகரன் போன் எண்: 9629781777


FaceBook link

https://www.facebook.com/pages/99Km-Filter-Coffee/627846600595093Wednesday, June 8, 2016

U TURN - Wrong turn leads to miserable death

 

ஹாய் friends சமிபத்துல நான் theatreக்கு போய் பார்த்த ஒரு தமிழ் இல்லாத ஒரு திரைப்படம்.

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சுன்னு தெரிலபா சத்யம் தியேட்டர்ல Sunday ஓரே ஒரு ஷோ தான் allot பண்ணி 
இருந்தாங்க. சத்யமே ரிலீஸ் பண்ணால நம்மக்கு எதுக்கு வம்புன்னு மத்த theatresம் ரிலீஸ் பண்ல. என்னடா இந்த படத்த பாக்கவே மாட்டோம்ன்னு நெனச்சுட்டு இது நம்ம ஆளு அப்டிங்குர உலக மகா காவியத்த  பார்க்க வச்ச என் மனைவிக்கு கோடி நன்றிகள்(இதெலாம் ஒரு படமானு நன் கமெண்ட் அடிச்சு நான் அவங்க கிட்ட வாங்கிகட்டிகிட்டது வேற கதை).

ஒகே ஒரு நாள் bookmyshow surf  பண்ணும் போது அங்க UTURN ஓடறது தெரிஞ்சு எனக்கு என்ன ஒரு ஆனந்தம். அதுவும் subtitle ஓட ஸ்க்ரீன் பண்றாங்கன்னு தெரிஞ்ச ஒடனே சும்மா குது குதுன்னு பைக்ல பறந்தசு மாயாஜால் சினிமாஸ்க்கு.

 பாக்குறதுக்கு முன்னாடி டைரக்டர் பவன் குமார் பத்தி சொல்லியே ஆகணும் இல்லாட்டி என் நண்பன் நமச்சிவாயம் கடிச்சு வச்சுடுவான். அவரோட முதல் படம் average ah போக,எப்பவும் போல கன்னட ப்ரோடுசெர்ஸ் தமிழ் or தெலுகு movie ரீமேக் பண்ணு சான்ஸ் தரேன்னு கடுபேத்தி இருக்காங்க. இதுல காண்டான நம்ம பவன் அவரோட blogல கண்ணா பின்னான்னு post போட within 3days அதாவுது  முன்றே நாளில் அவரோட blog likesல பிச்சுடுச்சு , இதாண்டா நேரம்ன்னு  லூசியா படத்த announce பண்ணாரு. 


நீங்க என்னடா எனக்கு produce பண்ண சான்ஸ் தர்றது நானே producer எனக்கு பலம் என் ரசிகன்டான்னு சிம்பு ஸ்டைல்ல ஆரம்பிச்சது தான் இந்த crowd funding movie கான்செப்ட்.
 அதாச்சு மக்கள் கிட்டேயே காசவாங்கி படம் எடுத்து லாபாத்த மக்களுக்கே செட்டில் பண்றது. பவன் 50 lakhs வச்சு படம் பண்ணார். கன்னட சினிமாவையே புரட்டி போட்ட படம் அது. ஹிந்தி,தமிழ்,தெலுகு படங்களையே எப்போவும் ரீமேக் செய்ற கன்னட சினிமாவ  LUCIA rights குடுபிங்காளான்னு எல்லாரையும் கேக்க வச்சாரு நம்ம பவன்.இவ்ளோ நேரம் நான் ஏன் இவ்ளோ typinenனா நம்ம ஊர்ல இவர பல பேர்க்கு தெரியாது. LUCIA நம்ம சித்தார்த் ரீமேக் செஞ்சு எனக்குள் ஒருவன்னு நம்மள வச்சு செஞ்சாங்க.

பெங்களுருல டபுள் bridge இருக்கு bridge ஏறி இறங்கி எவண்டா UTURN அடிகுரதுனு சோம்பேறிதனம் பட்டு நடுவுல கல்ல நகத்தி டிராபிக் ரூல்ஸ் பிரேக் பன்றவங்க பத்தி heroine ஒரு article எழுதுறாங்க அதுக்கு அங்க இருக்குற பிச்சைகாரர் ஒர்த்தருக்கு காசு குடுத்து வண்டி நம்பர் நோட் செய்றாங்க.ரூல்ஸ் பிரேக் செஞ்சு UTURN அடிச்சவங்க எல்லாரும் ஒர்த்தர் ஒருத்தரா suicide பண்ணிகுறாங்க, So  obvious ah heroine மெயின் suspect ஆராங்க. இதுக்கு மேல theatreல பாத்துக்குங்க

Shraddha Srinath குல்பி பொண்ணு நல்லா நடிசிருகாங்க. Diet ஆன நித்யா மேனன் மாதரி சில ஷோட்ல இருக்காங்க. அவங்க பாய் friend அந்த மண்டையன் எங்க அய்யா  புடிச்சிங்க.Roger நாராயணன் போலீஸ் நல்ல selection. Investigate scenesலாம் நல்லா செஞ்சுருகாரு. 

படத்தோட பிளஸ் கேமரா வோர்க் தான். Bridge,night shots,lockup scenes எல்லாமே செம கலரிங் அண்ட் கேமரா வொர்க். BGM படத்துல இருக்கான்னு எங்களுக்கு சில இடத்துல டவுட்.


படத்தோட மிக பெரிய பிளஸ் அண்ட் மைனஸ் அதோட twists  தான். ஏன் மைனஸ்னா most of the twists are predictable. 

அதோட இல்லாம தலாஷ் மாதரியே சில scenes கிளைமாக்ஸ்ல வருது. அப்புறம் ஈரம் படத்துல பேய் கொலை பண்ணும் பொது ஒரு பிங்க் கலர் clue கொடுக்கும் அத பவன் இங்க use பண்ணிருக்காறு.

லூசியா எடுத்த டைரக்டர் படம்னால இந்த movie க்கு facebook and twitterல hype அதிகம். 


ஓவரால் நீங்க நெறய thriller movie பாத்து இருந்திங்கனா you can easily predict the twists and even climax. 

 -ராம் 


Tuesday, June 7, 2016

இறைவி - பாலச்சந்தர் பாதி சுஜாதா பாதி ஆனா பாதி தான்

ரொம்ப நாள் கழிச்சு ஒரு விமர்சனம் போடலாமேனு போடப்படும் பதிவு இது.

வாரவாரம் 5 படம் வருது அதுல ஒன்னும் உருப்படி இல்ல. நான் இஸ்கூல் படிச்ச காலத்துல எல்லாம் ஒரு படம் 100 நாள் ஓடினா தன ஹிட்டு இல்லைனா அது மொக்க படம்னு இஸ்கூல்ல நாங்க பேசிப்போம். இப்போலாம் ஒரு வாரம் ஓடினாலே ஹிட்னு சொல்றாங்க. அப்டி ஒரு வாரம் ஓட போற படம் தன இந்த இறைவி.


கார்த்திக் சுப்புராஜ் இவர் மேல பல பேர்க்கு வெறுப்பு இருக்கு. அதுல மொதல் காரணம் வெறும் shortmovie எடுத்துட்டே சினிமால இவரு போன ஒசரம் தான் . எனக்கு தெரிஞ்சு மணிரத்னம்க்கு அப்பாலிக assistant  டைரக்டர் ah வேல பாக்கமா டைரக்டர் ஆனா அம்பி இவர் தான். ஆனா இவர பாத்து இப்போ எவன பாத்தாலும் ஒரு camera வச்சுகிட்டு shortmovie அப்டின்னு ஒரு கொரங்கு படத்த எடுத்துட்டு youtube ah சாவடிகுராணுங்க.


ஸெரி படத்துக்கு வருவோம்.கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோரி சொல்ல குடாதுன்னு வேண்டிகிடதால நம்ம ஒரு surf பண்லாம்.


3 hero  3 heroine 3 லவ் அவங்க அப்பா அம்மா அருவாள தூக்கிட்டு ஓடிவர ஊரே தொரத்த, நடுல ஒரு அச்டின் ஹீரோ பஞ்ச் அடிச்சுகிட்டே ஏழரை 3 ஜோடிய சேத்து வைக்கனு மொக்க போடாம ஒரு புது கான்செப்ட் எடுத்த director பாராட்டலாம் .


S J சூர்யா ஒரு நல்ல நடிகன் அப்டின்னு இசை படத்துலையே தெரிஞ்சுது அதுவும் physco,drunkard ரோல் நம்ம ஆளுக்கு அல்வா சாப்டுற மாதிரி. First  half தூக்கம் வராம பாத்துகிறதே இவர்தான்.
இந்த படத்துல இறைவினா அது அஞ்சலி தான். அவங்க makeover அப்டியே நாகர்கோயில் christian லேடீஸ் அப்டியே இருந்தாங்க.எங்கேயும் எப்போதும், கற்றது தமிழ் மாதரி ஒரு performance. Glamour ரோல் பண்ணாம commerical இல்லாம இவங்க இப்டியே நடிச்சங்கான இவங்க தன அடுத்த ரேவதி.

விஜய் சேதுபதி ரொம்ப நாள் கழிச்சு நல்லா நடிச்சு இருகார். இவர்கிட்ட எனக்கு புடிக்காதது என்னன்னா எல்லா படத்துலயும் பாலகுமாரா படத்துல வர மாதரியே பேசி நடிகுறது. சூப்பர் பாஸ் இப்டியே different ah பண்ணுங்க உங்களுக்கும் நல்லது பாக்குற எங்களுக்கும் நல்லது. அப்றம் அவங்க girl friend (கில்மா friend ) பிரியா thevariya (Please read carefully :P ) செம performanceனு நெனச்சுகிட்டே வாய்க்கு வந்தா மாதரி பேசுறாங்க இந்த கேரக்டர் எதுக்குனு டைரக்டர்கே வெளிச்சம்.


மத்தபடி பாபி சிம்ஹா,கமலினி முகெர்ஜி எலாம் வராங்க. பாபி படம் முடியணுமே அப்டின்னு ஒரு ட்விஸ்ட் கடைசியா வைகுராப்ல. ராதா ரவி பெருசா ரோல் இல்ல. அவர் நல்ல நடிகன். youtube பாத்து தெரிஞ்சுக்குங்க. ஒரு காலத்துல TR videos 2008 - 2010ல செம famous இப்போ அந்த இடம் ராதா ரவிக்கு தான்.


படத்தோட ரொம்ப பெரிய drawbackனா படத்தோட நீளம். எடிட்டர் விவேக் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டுருக்கலாம். First half ரொம்ப நீளம். கேரக்டர் explain பண்ற டைம் ரொம்ப ரொம்ப அதிகம்.இந்த மாதரி RAW subjectக்கு கொஞ்சமது வேகமா ஸ்க்ரீன்ப்ளே வேணும் அத கார்த்திக் மிஸ் பண்ணிடார்னு தான் சொல்லணும்.

பிளஸ்:

1. நியூ கான்செப்ட்
2.S J சூர்யா
3.அஞ்சலி
4.வசனம்

மைனஸ்:
1. ரன்னிங் டைம் 2.40 hrs
2.First Half
3.Screenplay
4.பாபி சிம்ஹா
5. பாடல்கள்


மொத்ததுல இறைவி என்னதான் women empoverment படம்னாலும் கொஞ்சம் கத்திரி கொஞ்சம் வேகமா எடுத்துருக்கலாம். பொறுமை அதிகம்னா தியேட்டர்ல பாருங்க.

-ராம்