Book My Iyer

http://bookmyiyer.com/

Wednesday, June 8, 2016

U TURN - Wrong turn leads to miserable death

 

ஹாய் friends சமிபத்துல நான் theatreக்கு போய் பார்த்த ஒரு தமிழ் இல்லாத ஒரு திரைப்படம்.

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சுன்னு தெரிலபா சத்யம் தியேட்டர்ல Sunday ஓரே ஒரு ஷோ தான் allot பண்ணி 
இருந்தாங்க. சத்யமே ரிலீஸ் பண்ணால நம்மக்கு எதுக்கு வம்புன்னு மத்த theatresம் ரிலீஸ் பண்ல. என்னடா இந்த படத்த பாக்கவே மாட்டோம்ன்னு நெனச்சுட்டு இது நம்ம ஆளு அப்டிங்குர உலக மகா காவியத்த  பார்க்க வச்ச என் மனைவிக்கு கோடி நன்றிகள்(இதெலாம் ஒரு படமானு நன் கமெண்ட் அடிச்சு நான் அவங்க கிட்ட வாங்கிகட்டிகிட்டது வேற கதை).

ஒகே ஒரு நாள் bookmyshow surf  பண்ணும் போது அங்க UTURN ஓடறது தெரிஞ்சு எனக்கு என்ன ஒரு ஆனந்தம். அதுவும் subtitle ஓட ஸ்க்ரீன் பண்றாங்கன்னு தெரிஞ்ச ஒடனே சும்மா குது குதுன்னு பைக்ல பறந்தசு மாயாஜால் சினிமாஸ்க்கு.

 பாக்குறதுக்கு முன்னாடி டைரக்டர் பவன் குமார் பத்தி சொல்லியே ஆகணும் இல்லாட்டி என் நண்பன் நமச்சிவாயம் கடிச்சு வச்சுடுவான். 



அவரோட முதல் படம் average ah போக,எப்பவும் போல கன்னட ப்ரோடுசெர்ஸ் தமிழ் or தெலுகு movie ரீமேக் பண்ணு சான்ஸ் தரேன்னு கடுபேத்தி இருக்காங்க. இதுல காண்டான நம்ம பவன் அவரோட blogல கண்ணா பின்னான்னு post போட within 3days அதாவுது  முன்றே நாளில் அவரோட blog likesல பிச்சுடுச்சு , இதாண்டா நேரம்ன்னு  லூசியா படத்த announce பண்ணாரு. 


நீங்க என்னடா எனக்கு produce பண்ண சான்ஸ் தர்றது நானே producer எனக்கு பலம் என் ரசிகன்டான்னு சிம்பு ஸ்டைல்ல ஆரம்பிச்சது தான் இந்த crowd funding movie கான்செப்ட்.




 அதாச்சு மக்கள் கிட்டேயே காசவாங்கி படம் எடுத்து லாபாத்த மக்களுக்கே செட்டில் பண்றது. பவன் 50 lakhs வச்சு படம் பண்ணார். கன்னட சினிமாவையே புரட்டி போட்ட படம் அது. ஹிந்தி,தமிழ்,தெலுகு படங்களையே எப்போவும் ரீமேக் செய்ற கன்னட சினிமாவ  LUCIA rights குடுபிங்காளான்னு எல்லாரையும் கேக்க வச்சாரு நம்ம பவன்.



இவ்ளோ நேரம் நான் ஏன் இவ்ளோ typinenனா நம்ம ஊர்ல இவர பல பேர்க்கு தெரியாது. LUCIA நம்ம சித்தார்த் ரீமேக் செஞ்சு எனக்குள் ஒருவன்னு நம்மள வச்சு செஞ்சாங்க.





பெங்களுருல டபுள் bridge இருக்கு bridge ஏறி இறங்கி எவண்டா UTURN அடிகுரதுனு சோம்பேறிதனம் பட்டு நடுவுல கல்ல நகத்தி டிராபிக் ரூல்ஸ் பிரேக் பன்றவங்க பத்தி heroine ஒரு article எழுதுறாங்க அதுக்கு அங்க இருக்குற பிச்சைகாரர் ஒர்த்தருக்கு காசு குடுத்து வண்டி நம்பர் நோட் செய்றாங்க.ரூல்ஸ் பிரேக் செஞ்சு UTURN அடிச்சவங்க எல்லாரும் ஒர்த்தர் ஒருத்தரா suicide பண்ணிகுறாங்க, So  obvious ah heroine மெயின் suspect ஆராங்க. இதுக்கு மேல theatreல பாத்துக்குங்க

Shraddha Srinath குல்பி பொண்ணு நல்லா நடிசிருகாங்க. Diet ஆன நித்யா மேனன் மாதரி சில ஷோட்ல இருக்காங்க. அவங்க பாய் friend அந்த மண்டையன் எங்க அய்யா  புடிச்சிங்க.Roger நாராயணன் போலீஸ் நல்ல selection. Investigate scenesலாம் நல்லா செஞ்சுருகாரு. 

படத்தோட பிளஸ் கேமரா வோர்க் தான். Bridge,night shots,lockup scenes எல்லாமே செம கலரிங் அண்ட் கேமரா வொர்க். BGM படத்துல இருக்கான்னு எங்களுக்கு சில இடத்துல டவுட்.


படத்தோட மிக பெரிய பிளஸ் அண்ட் மைனஸ் அதோட twists  தான். ஏன் மைனஸ்னா most of the twists are predictable. 

அதோட இல்லாம தலாஷ் மாதரியே சில scenes கிளைமாக்ஸ்ல வருது. அப்புறம் ஈரம் படத்துல பேய் கொலை பண்ணும் பொது ஒரு பிங்க் கலர் clue கொடுக்கும் அத பவன் இங்க use பண்ணிருக்காறு.

லூசியா எடுத்த டைரக்டர் படம்னால இந்த movie க்கு facebook and twitterல hype அதிகம். 


ஓவரால் நீங்க நெறய thriller movie பாத்து இருந்திங்கனா you can easily predict the twists and even climax. 

 -ராம் 






No comments:

Post a Comment