Book My Iyer

http://bookmyiyer.com/

Monday, June 20, 2016

குழலோசை - Music which joins us.






நம் நாட்டில் ஓழிக்க முடியாத பல விடயங்களில் ஒன்று ஆதரவற்ற குழந்தைகள். இந்திய அரசின் முக்கியமான கொள்கை அனாதை ஆசிரமங்கள் இல்லா இந்தியாவை உருவாக்குவது.

நான் ஏன் ஓழிக்க முடியாது என்று கூறினேன் என்றால், நம் நாட்டில் 20 மில்லியன் அதாவது 20 கோடி ஆதரவற்ற சிறார்கள் உள்ளனர். நம் நாட்டின் மொத்த  மக்கள் தொகையில் நான்கு விழுக்காடு, இதில் கேவலமான செய்தி 0.3%  பெற்றோர்கள் இறந்ததனால் ஆதரவற்றவர்கள் மற்றவர்கள் தெய்வத்துக்கு சமம் என நாம் வணங்கும் பெற்றோர்களால் புறக்கணிக்க பட்டவர்கள். தங்கள் இளம் பருவத்தில் அவர்கள் செய்யாத பாவங்களுக்கு தங்கள் பெற்றோர்களால் கைவிட பட்டவர்கள்.

இவர்களுக்கு நாம் என்ன செய்துவிட்டோம். மிஞ்சிப்போனால் 100 அல்லது 200 ரூபாய். வீடு தேடி வந்து நாங்கள் ஒரு ஆசிரமத்தில் இருந்து வருகிறோம் என்று குரல் கேட்டாலே கதவை அவர்கள் மொகரையில் சாத்திவிட்டு உள்ளே ஓடுவோம். அதற்கு நாம் சொல்லும் விளக்கம் "இவனுங்க எல்லாம் பிராடு காச அவன் ஜோப்புலையே போட்டுப்பான்". இந்த வசனத்தை நம் குழந்தைக்கு கூட அச்சிரம் பிசுகாமல் சொல்லிக்குடுப்பது நம் பராம்பரியம்.


குழலோசை  இந்த NGOக்கு ஏன் இந்த பெயர், இந்த உலகில் பல மொழி,ஜாதி,மதம் என பல பிரிவினர் இருந்தாலும் அத்தனை நபர்களுக்கும் புரியும் ஒரு மொழி இசை தான்.எப்படி ஒரு குழலில் இருந்து ஒரு ஓசை அத்தனை பேரையும் இணைகிறதோ அதே போல் நாம் அனைவரும் இணைந்து சேவை செய்வோம் என்பது  இவர்கள் மோட்டோ.

நானும் இந்த 200 ரூபாய் கோஷ்டிதான். சேவை செய்ய ஆசைதான் ஆனா சோம்பேறி. இப்பொழுது இருக்கும் இளசுகள் கொஞ்சம் சோம்பேறி தான் ஏனென்றால் வேலை பளு அதுவும் IT பசங்க நாங்க பாவம் வாரம் இரண்டு நாள் விடுமுறைல எவ்ளோ தான் பண்றது இதுல சேவை உப்புமான கொஞ்சம் கடுப்பு அவ்ளோதான் பட் வீ ஆர் குட் பாய்ஸ்.

என் மனைவியின் நண்பன் இந்த குழுவை ஆரம்பிக்கும் பொழுது முதல் சேவைக்கு நங்கள் கோரடூர் சென்றோம். வெறும் 15 பேருடன் இந்த சேவையை ஆரம்பித்தவர் ராஜேஷ் மணிவாசகம். இவர் தான் இந்த குழுவின் தலைவர்.





எங்களால் முடிந்ததை முதலில் செய்தோம்.இப்பொழுதும் எப்பொழுதும் நாங்கள் என்றும் புது துணியோ அல்லது அன்றைய மதிய உணவை மட்டும் கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.

முதலில் நாங்கள் தேர்வு செய்யும் ஆசிரமம் வசதி உள்ளதாக இருக்காது. முதலில் நாங்கள் அவர்களிடம் கேட்பது இப்பொழுது உங்கள் அத்தியாவசிய தேவை என்ன ? அதை எங்களால் முடிந்தவரை நிறைவேற்றுவோம். அன்றைய மதிய உணவு எங்களுடையது. Ok உணவு மட்டும் கொடுத்தால் போதாதே செவிக்கும் கண்களுக்கும் விருந்து இல்லாமல் இருந்தால் எப்படி.
ஆடல் பாடல் குழு குலலோசையில் உள்ளது.


ஆடல் பாடல் நிகழ்ச்சி செய்வதும் நாங்களே.







முதலில் 15இல் இருந்த எங்கள் கணக்கு இப்பொது 150ஐ நெருங்கி வருகிறது.

ஒரு வருடத்தில் 7 ஆசிரமத்தில் நாங்கள் சேவை செய்து உள்ளோம். சேவை செய்தபின்னும் நங்கள் இன்னும் எல்லா home இடமும் தொடர்பில் உள்ளோம். 

நாங்கள் சேவை தான் செய்வோம் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. பிளாஷ் மோப் தெரியுமா சூர்யா 7ஆம் அறிவு படத்தில் ஆடுவரே remember ?


இதுவரை 3 பிளாஷ் மோப் எங்கள் குழு ஆடி உள்ளது ஆடல் பாடல் என் இலாகா இல்லை அதனால் நான் எஸ்கேப் ஆயிடுவேன்.

முதல் பிளாஷ் மோப் தேங்கு awarness பற்றியது,இரண்டவது ஹெல்மெட்,மூன்றாவது 100% vote.




ஒரு வருட விழாவை Egmore museum ஹாலில் வெற்றிகரமாக முடித்து உள்ளோம்.



அடுத்ததாக முதல் முறையாக எங்கள் சிறகுகள் சென்னையை தாண்டி vellore வரை விரிகிறது. 

இந்த குழு மென்மேலும் வளர உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை.

உங்களால் முடிந்த தொகையை கொடுங்கள் உங்களையும் விடாமல் எங்கள் கூட்டில் உங்களையும் இணைத்து கொள்வோம்.


தொடர்பு :
ராஜேஷ் :7845387565

-ராம் 

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இந்த பதிவிற்காக உனக்கு பூங்கொத்து...

    குழலோசை குழுவுக்கு பாராட்டு

    ராஜேஷ்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Tats very interesting to read.
    Even though we know everthing
    Gr8 one ram

    ReplyDelete