Book My Iyer

http://bookmyiyer.com/

Tuesday, June 28, 2016

Metro - A different attempt but with bad casting.

தற்போதைய நுங்கம்பாக்கம் சுவாதி கொலை கேஸ் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அதே போல சற்றுறும் மனிதாபிமானம் இல்லா மனிதர்களை பற்றிய படம் இந்த மெட்ரோ .


Chain Snatching என்பது நம்மை பொறுத்தவரைக்கும் செய்தித்தாளில் நான்காம் பக்கத்தில் வரும் ஒரு செய்தி. அந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்று இயக்குனர் சிறிது ஆராய்ந்து நம்மக்கு தந்து உள்ளார்.

இத்தனை ஆராய்ச்சி செய்தவர் ஏன் castingஇல் கோட்டை விட்டார் என்பது அவருக்கே உத்தமம்.முக்கியமாக நாயகன் சிரிஷ் முகத்தில் சுத்தமாக expression இல்லை. தேமே என படம் முழுவதும் நிற்கிறார் நடக்கிறார் . இவர் ஒரு நடமாடும் set property போல படம் முழுவதும் சுத்திவருகிறார்.வில்லன் இவர் தம்பி அவர் அதற்கு மேல் கெத்தாக செய்ய வேண்டிய ஒரு கதாபாத்திரம், சும்மா bike வேணும்னு அடம் பிடிக்கிறார், அவர் அண்ணன் லோன் apply செஞ்சு வாங்கித்தரேன்னு சொன்ன அப்பறம் ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரு  பாருங்க oscar உங்களுக்கு தான் பாஸ்.பாப்பி சிம்ஹா ஒரு ரோல் பைக்கில் வருவார் டீல் பேசுவார், பிளான் போடுவார் அவ்ளோதான்.

Chain snatch ரூல்ஸ்ஐ நன்றாக எடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் மூலம் நாம் நம்மை எப்படி பாதுகாத்து கொள்ளவது என கற்றுக்கொள்ளலாம். 

படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றால் Camera மற்றும் bgm. படத்தின் பெரிய பலம் இவைகள் தான். Bird eye  view to  neutral shots மிகவும் அட்டகாசம்.

இந்த திரைப்படத்தில் எப்படி ஒருவன் நிழல் உலகத்தில் விழுகிறான் என்பதை இயக்குனர் நன்றாக handle செய்துள்ளார். இருக்கறதை வைத்துக்கொள்ளாமல் அதிகமாக பேராசை கொள்ளவதால் தான் எல்லா தவறும் நடக்கிறது. நம் நாட்டில் நடக்கும் எல்லா தவறுக்கும் பேராசையே காரணம்.திருடுவதில் கூட பேராசை.


படத்தில் பிடித்தவை :
1. Camera 
2. BGM 
3.New Concept 


எரிச்சலூட்டியவை :
1. Immature acting by lead actors 
2. Making and  screenplay.


இந்த படத்தின் மூலம் இயக்குனர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன தான் கதை நன்றாக இருந்தாலும் lead actors should perform well or else it is a  waste of time and money .


-ராம்  
 

1 comment:

  1. நல்ல விமர்சனம்... பார்க்க நேரம் கூடிவரவில்லை

    ReplyDelete